போகர் சப்தகாண்டம் 2486 - 2490 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2486 - 2490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2486. பூட்டவென்றால் தலைபக்கம் கரும்பாலைபோல புகழான குழியொன்று தடாகமொன்று
நீட்டமுடன் தடாகத்தின் சுற்றுவோரம் நிலையான வாய்க்கால்போல் குழையுண்டாக்கி
பூட்டமுடன் குழைதனிலே யாலைவைத்து பொங்கமுடன் தொட்டியென்ற கிணறுண்டாக்கி
வாட்டமுடன் தொட்டிக்குள் நூல்போல்கம்பி வகுப்புடனே தானமைத்து சக்கரமாட்டே

விளக்கவுரை :


2487. சக்கரமுமாட்டியே வாலைதன்னை சாங்கமுடன் புகையென்ற வாலைதன்னால் 
தக்கபடி திருப்பலுடன் கோணித்தன்னைச் சாந்தமுடன் தானரைத்துக் குளத்துக்கேற்றி
ஒக்கவே தெளிவதனை மேலேநோக்கி உவமையுடன் போகவே வழியுண்டாக்கி
பக்கமுடன் தௌஇவதனில் பூநீறுசேர்த்து சார்புடனே தொட்டிதனில் கரைத்திடாயே

விளக்கவுரை :

[ads-post]

2488. கரைத்துமே மூன்றுநாள் சென்றபின்பு கருவாக தொட்டிதனில் சரக்குவைத்து
நிரைப்புடனே படல்கட்டி காயுதத்தை நேர்புடனே தானெடுக்க வண்ணம்பாரு
திரைப்புடனே வாலையென்ற கையிலப்பா திறமான பிரதிமை யொன்றிவுக்கும்
முறைப்படியே கைதனிலே படல்தானீய முளையாமல் தொட்டிதனில் கலக்கிடாயே

விளக்கவுரை :


2489. கலக்கஐயிலே வண்டலது படல்மேல்சாந்து கடினமுடன் சக்கரத்தைச்சுத்திவந்து
நிலத்தினது மேடையிலே சட்டந்தன்னில் நிலைமையுடன் தானமைத்து மேலேவைக்கும்
தலப்புடனே மறுவாலைதனிலிருந்து புகழாகச் சீலையது மூடிக்கொள்ளும்   
தலப்புடனே பின்னுகந்த பதுமைதானும் தடாகத்தில் வண்டல்தனையெடுக்குந்தானே

விளக்கவுரை :


2490. எடுக்குமே சக்கரமாமாலைதன்னால் எழிலான வண்டலுடன் சரக்கையெல்லாம்
தொடுக்கவே மேற்படியில் கொண்டுசென்று துப்புரவாய் வாலையென்ற சட்டந்தன்னில்
படுக்குமே படல்தானும் விட்டபோது பாங்குடனே சீலையது மூடிக்கொள்ளும்
அடுக்குமே இப்படியே பலகாணுந்தான் ஆலையது சுழன்றுமே யோடுந்தானே
விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar