2456. உண்மையால் தயிலமாம் உறுமெத்த
வுத்தமனே பொறிச்சூடு விட்டேயோடும்
திண்மையாம் பிடரிவலி
சன்னிபோகும் திரளான வேர்வையது துள்ளிஓடும்
வண்மையாம் கையெரிவு
காலெரிவுதானும் மகத்தான வாயுவென்ற தெண்பதுவும்போம்
நண்மையாம் காந்தலது மிகறாது
நளினமுடன் போகரிஷி நவின்றவாறே
விளக்கவுரை :
2457. வாறான வின்னமொரு
மார்க்கம்பாரு வளமையுடன் கெந்தகமும் சேர்தானொன்று
நேறான சீனமது சேர்தான்ரெட்டி
நெடிதான பூநீறு சேர்தான்காலாம்
பானான உப்பதுவும்
சேர்தான்பாதி பளிங்கான வளையலென்ற வுப்புத்தானும்
தேறான யெவாசாசாரம்
தான்காலாம் சிறப்பான சரக்கெல்லாம் பொடியாய்ச்செய்யே
விளக்கவுரை :
[ads-post]
2458. செய்யவே வாலையென்ற பானைக்குள்ளே சீருடனே சரக்கெல்லாம் போட்டரைத்து
பையவே சக்கரமாம் வாலைவைத்து
பாகமுடன் திராவகத்தை இறக்கிப்பாரு
முய்யவே மூன்றுமுறை
இந்தபாகம் முயற்சியுடன் தானிறக்கியெடுத்துக்கொண்டு
துய்யநல்ல சீஷாவில்
அடைத்துக்கொண்டு துப்புரவாய் கற்பரணை மூடிடாயே
விளக்கவுரை :
2459. மூடவே திராவகத்தின் காரமப்பா
மூவுலகும் தானெரிக்கும் கதிரோன்போல
சாடவே சரக்குக்குக்
காலனாகும் சாங்கமுடன் திராவகமோ சுருக்குமெத்த
நீடவே திராவகத்தை பதனம்பண்ணி
நினைப்புடனே யின்னமொரு மார்க்கம்பாரு
கூடவே கண்டருட திராவகத்தை
கூறுவேன் மாணாக்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
2460. தானான துருசதுதான்
சேர்தானொன்று தாக்கான சீனமது சேர்தானொன்று
வேனான பூநீறு சேர்தான்பாதி
வேகமுடன் கல்லுப்பு சேர்தான்காலாம்
கோனான வெண்காரம்
சேர்தான்காலாம் கொப்பெனவே விவையெல்லாம் பொடியதாக்கி
மானான எனதையர் குருவையெண்ணி
மார்க்கமுடன் பானைதனில் கொட்டிடாயே
விளக்கவுரை :