போகர் சப்தகாண்டம் 2726 - 2730 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2726 - 2730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2726. தானான பசுமையது யிடைதானிற்கும் தாக்கான செம்பதுவு மற்றுப்போகும்
வேனான தங்கமது நாலுக்கொன்று விருப்பமுடன் வாரடித்துப் புடத்தைப்போடு
தேனான பொன்னதுவும் மாற்றெட்டாகும் தெளிவான புடத்துக்கு வுறுதிதங்கும்
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருபரன்தன் முறைப்படியே கூறினேனே

விளக்கவுரை :


2727. கூறினேன் வெள்ளியென்ற செந்தூரத்தை குணமான திரிகடுகு சூரணத்தில்
மீறியே வனுபான மறிந்துகொள்ள மிக்கான ரோகமெல்லா மகன்றுபோகும்
சீறியே மேகமென்ற பிணிகள்போகும் சிவப்பான தேகமது வண்டுபோலாம்
மாறியே வாசியது கீழ்நோக்காகும் மகத்தான ரோகமெல்லாம் அகன்று போமே

விளக்கவுரை :

[ads-post]

2728. அகன்றுபோம் வாயுவென்ற எண்பதும்போம் அப்பனே காசரோகமகன்றுபோகும்
தகன்றுமே மேல்மூச்சு காணாதோடும் தாக்கான வாய்வூரல் விட்டுப்போகும்
புகன்றுமே சில்விஷங்கள் காணாதோடும் புகழுடனே மதிமயக்கம் பொருமியோடும்
சகன்றுமே பாண்டுவகை போகும்போகும் சார்பான மேலிளப்பு தீர்ந்துபோமே  

விளக்கவுரை :


2729. போமேதா மின்னமொரு மார்க்கம்பாரு பொங்கமுடன் தாளகமும் பலமொன்றாகும்
தாமேதான் துருசதுவும் பலமொன்றாகும் தாக்கான ஈருள்ளுச் சாற்றினாலே
வேமேதான் தானரைப்பாய் நாலுசாமம் விருப்பமுடன் மைபோலேயாட்டி மைந்தா
நாமேதான் சொன்னபடி கலசம்செய்து நலமாக ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


2730. போடவே சுண்ணாம்புச் சீலைசெய்து பொங்கமுடன் கல்வமதிலிட்டுமைந்தா
நாடவே மெல்வாய்க்கு சீலையேழு நலமாக ரவிதனிலே காயவைத்து
கூடவே பத்தெருவிற் புடத்தைப்போடு கொற்றவனே புடமாறி எடுத்துப்பாரு
தேடவே தாளகமும் கட்டிப்போகும் தெளிவான வங்கமது திரளுந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar