போகர் சப்தகாண்டம் 2601 - 2605 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2601 - 2605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2601. ஏற்றவே கலசம்வாய் ரவியினால் எழிலாக மூடியல்லோ சீலைசெய்து
போற்றியே மனோன்மணியை தியானித்தேதான் பொலிவாக முன்போல புடத்தைப்போடு
காற்றில்லா விடந்தனிலே புடந்தான்போடு கறுப்பான பதங்கமது மேலேதாவும்
ஆற்றியே புடமாறி யெடுத்துப்பாரு அப்பனே பதங்கமது சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


2602. சொல்லவென்றால் நாவுமில்லை பாவுமில்லை சூட்சாதி சூட்சமெல்லாம் சூதத்தாட்டம்
வெல்லவே பதங்கமதை எடுத்துக்கொண்டு விருப்பமுடன் பரணைக்குள் பதனம்பண்ணு
கொல்லவே தங்கமது களஞ்சியொன்று கூரான பதங்கமது சரிநேரொக்க
மெல்லவே மூசைதனி லடைத்துமைந்தா மேன்மையுடன் சில்லிட்டுச் சீலைசெய்யே

விளக்கவுரை :

[ads-post]

2603. செய்யவே சீலையது வலுவாய்ச்செய்து செப்பமுடன் சரவுலையில் வைத்துயூது
பையவே தீயாறி யெடுத்துப்பின்பு பக்குவமாய் மூசைதனை யுடைத்துப்பாரு
மெய்யான யேமமது செப்புமாகும் மேன்மையுடன் செம்புதனை எடுத்துப்பாலா
துய்யவே பதினாலுக்கொன்றுசேரு துப்புரவாய் மாற்றாறு காணுந்தானே 

விளக்கவுரை :


2604. காணவென்றால் வாதவித்தை லகுவிலாச்சோ கண்டவர்கள் விண்டவர்கள் யாருமில்லை
தோணாத சரக்கெடுத்து வூதியென்ன தொல்லுலகில் கெட்டவர்கள் கோடாகோடி
சாணான கைப்பொருள்போல் வாய்க்குமோசொல் சண்டாள துரோகிகட்கு வாய்க்காதன்று
வீணாகத் தானலைந்து சுட்டுகெட்டு வீணிலே மடிந்தவர்கள் கோடியாமே

விளக்கவுரை :


2605. கோடியா மின்னமொரு கருமானங்கேள் கொட்டினேன் வாதமென்ற கட்டைதானும்
தேடியே யலைந்தாலும் கிட்டுமோசொல் தெளிவான லிங்கமது களஞ்சிபத்து
வாடியே திரியாதே மன்னாகேளு வளமாகச் சொல்லுகிறேன் லிங்கப்போக்கு
நீடியே பாவையர் மூன்றுநாளு நினைவாக முழுகிடவே யூறப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar