2961. தோஷித்து சிவன்தன்மேல்
தோஷஞ்சொல்லி தோராயமாகவல்லோ நூலைமாற்றி
பாஷியங்கள் தோருமல்லோ
பரமன்தன்மேல் பாடிவைத்தார் தூஷனைகள் மெத்தவுண்டு
காசினியி லாயிரத்தெட்டு
சிவாலயங்கள் கட்டினார் வெகுகோடி மாந்தரப்பா
பூசிதமாம் திருப்பதி
நூற்றேயெட்டு பொங்கமுடன் கட்டினார் சூட்சந்தானே
விளக்கவுரை :
2962. தானான சூட்சாதி தேவஸ்தானம்
தாரிணியில் சொற்பதாய் கண்டதுண்டு
பானான பரமசிவன் சிவாலயங்கள்
பார்க்கவென்றால் கணக்கில்லை லக்கோயில்லை
தேனான வாதிசேடந்தன்னாலும்
தெளியாது நாவில்லை பாவுமில்லை
மானான பரமபதி மெத்தவுண்டு
மானிலத்தில் வாழாது மாந்தர்கேளே
விளக்கவுரை :
[ads-post]
2963. கேளேதான் சிவன்தனையே பழித்தாலும் கீர்த்தியுடன் சாத்திரத்தைக் கூறலானும்
நீளேதான் வைகுண்ட பதியிலப்பா
நேர்ந்துதே வெகுகோடி தெண்டந்தானும்
மீளவே சொற்பனமாம்
வாக்கினையும் மீண்டுதே துள்வார்கை சீஷவர்க்கம்
சூளவே யவர்பக்கல் யானிருந்து
சுந்தரனே யதிசயங்கள் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
2964. பார்த்திட்டேன்
வைகுண்டபதியில்தானும் பாங்குடனே வதிசயத்தை சொல்லப்போனால்
பூர்த்திட்ட பாரினிலே
பொய்யென்பார்கள் பொய்யென்பார் மெய்யென்பார் ஆருமில்லை
சாத்திட்ட வைகுண்ட
சரிதைதானும் தேர்ந்தவரை யானுரைத்தேன் தெளிவதாக
மார்த்திட்ட மாகவேதான்
கைலைதன்னில் மகாகோடி வாக்கினைகள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
2965. உண்டான வதிசயங்க
ளின்னஞ்சொல்வேன் உம்பர்பிரான் பதியினது காவையாவும்
திண்டான
கிருஷ்ணாவதாரந்தானும் திகழுடனே வெகுகோடி மாதர்தம்மை
பாண்டான வையகத்தில்
கற்பழிந்து பாவையரை லீலையது செய்ததாலும்
கண்டேனே வைகுண்ட
பதியில்தம்மை கரியமால் ஆக்கினைகள் சொற்பமாமே
விளக்கவுரை :