போகர் சப்தகாண்டம் 2521 - 2525 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2521 - 2525 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2521. ஆறான சிவதையது களஞ்சிநாலு அப்பனே நன்னாரி களஞ்சிபத்து
நேறான பற்பாடம் களஞ்சியாறு நேறான சிறுதேக்கு களஞ்சிரண்டு
தாறான பற்படகம் களஞ்சிரண்டு தளிரான சோரியது களஞ்சிரண்டு
சேறான செம்பூரான் களஞ்சிரண்டு சிறப்பான தேசாவின் வரமுந்தானே

விளக்கவுரை :


2522. தானான வரமதுவும் களஞ்சிரண்டு தாக்கான மயிலிறகு களஞ்சிநாலு
வேனான வலம்புரியுங் களஞ்சியொன்று வியர்வான ஏலமது களஞ்சியெட்டு
பானான சாம்பிராணி களஞ்சிநாலு பதமான ரோகணியுங் களஞ்சியெட்டு
தானான மகரப்பூ களஞ்சிரண்டு தகைமையுடன் குரோசானி களஞ்சிபத்தே

விளக்கவுரை :

[ads-post]

2523. பத்தான நாகப்பூ களஞ்சியொன்று பாகமுடன் சித்தரத்தை களஞ்சியொன்று
சித்தான நிலைப்பனைக் களஞ்சியொன்று சிறப்பான பூகுசர்க்கரை தானொன்று
புத்தான வட்டதிப்பிலி தானொன்று புகழான வாய்விளங்கம் களஞ்சியொன்று
முத்தான வன்னமெனும் பேதிதானும் முயற்சியுடன் சாத்திரத்தின் பேதிதானே

விளக்கவுரை :


2524. பேதியாம் மாமிஷமும் களஞ்சியொன்று பேரான இருமஞ்சள் மரமஞ்சள்தானும்
வாதியாய் குன்றிமணி களஞ்சியாறு வகுப்பான முட்டியுடன் பேராமுட்டி
சாதியா மதுரமுடன் அக்கிராகாரம் சாங்கமுடன் களஞ்சியது ரண்டதாகும்
மேதியாம் நெருஞ்சியது ரண்டதாகும் மேலான களஞ்சியது ரண்டதாமே 

விளக்கவுரை :


2525. தாமான வெள்ளுள்ளி களஞ்சியாறு தாக்கான கசகசா களஞ்சிரண்டு  
காமான சரக்கெல்லா மொன்றாய்க்கூட்டி கருவாகத் தானரைக்க விபரங்கேளு
நாமான மூலிவகை உரைப்போம் பாராய் நாட்டிலே நாதாக்கள் சொன்னதில்லை
பாமான கையான்சார் சாமம்நாலு மயங்காமல் தானரைப்பாய் மகிபாதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar