போகர் சப்தகாண்டம் 2846 - 2850 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2846 - 2850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2846. சேரேதான் பசளையது ரண்டதாகும் சிறப்பான கரும்பசளை செம்பசளையுமாகும்
தூரேதான் கையானுமிரண்டதாகும் துடியான நற்கையான்பொற்கையான்தான்
சாரேதான் கிரந்தியது ரண்டதாகும் சாங்கமுடன் சிவகிரந்தை விஷ்ணுதானும்
நேரேதான் பாளையது ரண்டதாகும் நெடிதான பங்கனிட பாளைதானே

விளக்கவுரை :


2847. தானான பாளையது வாடுதீண்டா தாக்கான சின்னியது பெருஞ்சின்னிதானும்
பானான சிறுகின்னிதானும் கூட்டு மைந்தனே முருங்கையது ரண்டதாகும்
வேனான பேய்முருங்கை நல்முருங்கைதானும் வேகமுடன் தான்கூட்டு மெத்தநன்று
பானான கத்தாழை ரண்டதாகும் பாகமுடன் கல்லினிட தாழையாமே

விளக்கவுரை :

[ads-post]

2848. தாழையாம் சோத்தினிட தாழையாகும் தாக்கான கருங்கொள்ளு செங்கொள்ளுமாகும்
வாழையாம் பேய்வாழை நல்வாழையப்பா வாகுடனே கருணையது ரண்டதாகும்
மோழையாம் நல்கருணைபொற்கருணையாகும் மூதண்ட நெல்லியது ரண்டதாகும்
காழையாம் நெல்லி பருநெல்லியாகும் கடிதான கரும்பதுவு மிரண்டதாமே

விளக்கவுரை :


2849. ரண்டுடனே வெண்கரும்பு செங்கரும்புதானும் நிலையான வாகையது ரண்டதாகும்
திண்டான பெருவாகைசிறுவாகையப்பா திறமான நொச்சியது ரண்டதாகும்
பண்டான கருநொச்சி வெண்ணொச்சிதானும் பாகமுடன் தான்சேர்க்க மெத்தநன்று
கொண்டலுடன் நாவலது ரண்டதாகும் கொடிதான கருநாவல் வெண்ணாவல்தானே

விளக்கவுரை :


2850. தானான நங்கையது ரண்டதாகும் தாக்கான பெரியானின் சிறியான்தானும்
வேனான விளாவதுவும் இரண்டதாகும் வேகமுடன் குட்டிவிளா பெருவிளாயுமாகும்
கோனான வவரையது ரண்டதாகும் கொடிதான நல்லவரை கோழியவரைதானும்
பானான கடுக்காயுமிரண்டதாகும் பாங்கான பொற்கடுக்காய் நற்கடுக்காய்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar