2871. கேளப்பா வமராபுரி சென்றேன்யானும்
கொடியான கோட்டைமுதல் வுளவுகண்டேன்
தாளப்பா தங்கமதில்
கோட்டையப்பா தாக்கான மாளிகையுங் கோபுரந்தான்
வானப்பா வீதிகளின்
தேர்களப்பா வகுப்பான சோலைமுதல் தோப்புமுண்டு
நீளப்பா மல்லைகைப்பூ
சாலையுண்டு நீடாழி கோட்டைக்கு வலங்கமுண்டே
விளக்கவுரை :
2872. உண்டான வசுவங்கள் கூட்டமுண்டு உத்தமனே வெள்ளானைக்கூட்டமுண்டு
திட்டான கோட்டைக்குள்
அனேகமாதர் சிறப்புடனே நாட்டியங்கள் செய்துநிற்பார்
பண்டான கனிவகைகள் அனேகமுண்டு
பாங்கான தேவதா கனியென்பார்கள்
வண்டான கூட்டங்கள்
கீதம்பாடும் மகத்தான தொனியோசை யனேகம்பாரே
விளக்கவுரை :
[ads-post]
2873. பாரேதான் நவரத்தின
மலையுமுண்டு பாலகனே வெகுகோடி ரிஷிகள் கண்டேன்
மேரேதான் மேருவுமிதற்கீடல்ல
மெத்தவுண்டு வதிசயங்கள் சொல்லப்போமோ
நேராதான் வாக்கினையின்
பக்கல்சென்றேன் நெடிதான வடக்குபுரம் கொண்டுசென்றார்
சீரேதான் ஆக்கினைகள்
மெத்தவுண்டு சிறப்புடனே கண்டுமல்லோ திடுக்கிட்டேன்
விளக்கவுரை :
2874. திடுக்கிட்டு பார்த்தளவில்
கிங்கிலியரப்பா சிறள்கூட்டமாயிரம்பேர் ஓடிவந்து
ஒருக்கமுடன்
தூதுவர்களாயிரம்பேர் வுத்தமர்களானவர்கள் ஒன்றாய்க்கூடி
நடுக்கமுடன்
நரகமதிலிழுத்துக்கொண்டு நாட்டமுடன் தள்ளுகின்ற வளமைகண்டேன்
ஒடுக்கமுடன்
மாந்தர்களைத்தான் குறித்து வுத்தமரே செய்பாஞ் சொல்லென்றாரே
விளக்கவுரை :
2875. சொல்லென்று கேட்கையிலே
தூதர்தாமும் செப்பலுற்றார் அவர்செய்தபாவந்தன்னை
வெல்லவே பூசைமுக மிடர்செய்தோர்கள்
வேகமுடன் உடைமைதனை கொள்ளை கொண்டோர்
புல்லவே மிருகமென்ற
சீவன்தன்னை பொங்கமுடன் வகைசெய்து கொன்றுபோட்டோர்
அல்லலுடன் சையோகஞ் செய்தபேரை
அகடழித்து நாணம்வரச் செய்தார்தாமே
விளக்கவுரை :