2666. கிழங்கான விரையுடனே
கெந்திசேர்தான் கிளறியே குழியம்மி தன்னிலிட்டு
பழங்கமுடன் தானிடித்து
பாண்டமிட்டுப் பாகமுடன் பாகமுடன் பாண்டமதிற் சிலதுபோட்டு
தழங்கவே மெல்வாய்க்குச்
சீலைசெய்து தகைமையுடன் குழித்தயிலம் இறக்கிக்கொண்டு
வழங்கவே தயிலமதை பதனம்பண்ணு
வளமையுடன் ரவிதனிலே தாக்குவாயே
விளக்கவுரை :
2667. தாக்கவே தகடடித்துப்
பூசிப்போடு தனியான செம்பதுக்கு புடமேபோடு
நோக்கமுடன் செம்பதுவும்
ஊரலேகி நெடிதான செம்பதுவும் மாற்றுகாணும்
பார்க்கவே செம்பதுவும்
மூன்றேயாகும் பாங்கான வெள்ளியது நான்கேயாகும்
போக்கவே தானுருக்கி
தகடடித்துஃ பொங்கமுடன் தான்போட மாற்றுமாமே
விளக்கவுரை :
[ads-post]
2668. மாற்றான பொன்னதுவும்
ஆறேயாகும் மகத்தான தங்கமது மூன்றுக்கொன்று
நீற்றான விரண்டையுந்தான்
ஒன்றாய்க்கூட்டி நிறையுடனே தானுருக்கி மன்னாபாரு
கூற்றான பொன்னதுவும்
எட்டெயாகும் குணமான பசுந்தங்கம் அதற்கீடாகும்
தூற்றான தயிலமது
வேதிக்கும்பார் துறையான முறையதுதான் அதீதம்பாரே
விளக்கவுரை :
2669. அதீதமா இத்தயிலம் கொண்டுபாரு
அப்பனே குஷ்டமது கடைகெட்டோடும்
துதீதமுடன் மேகமென்ற
திருபதும்போம் துலையாத கவுசையொடு பொருமல்போகும்
வதீதமுடன் சூலையது
விட்டேயோடும் வாகான கிரந்திமுதல் சிரங்குபோகும்
கதீதமுடன் நரம்புவலி
ரணங்கள்போகும் கண்ணொளிவு காட்டுவது தயிலமாமே
விளக்கவுரை :
2670. ஆமேதான் தயிலமது காயசித்தி
அப்பனே தேகமது கற்றூணாகும்
காமேதான் காயாதிகற்ப நூலை
கவனமுடன் கண்டறிந்து பாடலுற்றேன்
நாமேதான் சொன்னபடி
சத்தகாண்டம் நாட்டுளோர் பிழைக்கவென்று நவின்றிட்டேன்
வேமேதான்
காலாங்கிபாதம்போற்றி விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டமேழே
விளக்கவுரை :