போகர் சப்தகாண்டம் 2376 - 2380 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2376 - 2380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2376. பார்த்தாரே ராஜாதிராஜரெல்லாம் பளிங்குடனே திருமுகத்தைக் கண்டதில்லை
நேர்த்தியுடன் பணிதிபூண்டு நீணிலத்தில் திருமுகம் மங்கலாக
பூர்த்தியுடன் பிரகாசமான ஜோதிபூவுலகில் கண்டவரும் ஒருவரில்லை
கார்த்தியுடன் மங்கலாய் முகத்தைக் கண்டார் காசினியில் ராசர்களும் சித்தர்தாமே

விளக்கவுரை :


2377. காணாமல் போனார்கள் ராசரெல்லாம் காட்சியுடன் கண்காட்சிக் கண்டதில்லை
வீணாகத் தானலைந்தார் முனிவர்சித்தர் வெகுகோடி யேமவித்தை செய்தாரப்பா
பூணாரம் பூண்பதற்கு பொன்னுஞ்செய்தார் பூதலத்தில் அழகுதனைப்பார்ப்பதற்கு
தோணாமல் தானிருந்தார் சித்தரப்பா தொல்லுலகில் மறந்திட்டார் முனிவர்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2378. முனியான காலாங்கி தாள்பணிந்து முயற்சியுடன் அடியேனும் குளிகைபூண்டு
தனியாக யானுமல்லோ சீனஞ்சென்றேன் தகமையுடன் பூநீரைக் கண்டறிந்தேன்
பணியான தேசமது சீனமார்க்கம் பான்மையுடன் எத்தொழிலுஞ் செய்வதற்கு
தொனியான தேசமென்று நிட்சயித்து தொடங்கினேன் கண்ணடி காய்ச்சவென்றே

விளக்கவுரை :


2379. என்றுமே சித்தரெல்லா மனேகவித்தை எழிலாகச் செய்தார்கள் பூமிதன்னில்
சென்றுமேயானுமல்லோ சீனந்தன்னில் சிறப்புடனே கண்ணடி காய்ச்சவென்று
குன்றுமலை குகைதனிலே வாராய்ந்தேதான் கோடானகோடிவளம் கண்டாராய்ந்து
நின்றுமே சாத்திரத்தின் உளவுபார்த்து நிர்மித்தேன் கண்ணடி மார்க்கந்தானே

விளக்கவுரை :


2380. மார்க்கமுடன் கண்ணடிக் காய்ச்சிவிட்டேன் மயங்காமல் பூநீரைக்கண்டறிந்தேன்
தீர்த்தமுடன் வட்டவெளிசேமித்தேன்யான் திறமுடனே பளிங்குயென்ற வட்டஞ்செய்தேன்
வார்க்கமுடன் கருக்கட்டி வளவுசெய்தேன் வளமுடனே சூதமுடன் உளவுகண்டேன்
பார்க்கையிலே சூதமென்ற கிணறுகண்டேன் பாகமுடன் கண்ணடிக் கேற்றலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar