போகர் சப்தகாண்டம் 2776 - 2780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2776 - 2780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2776. கூட்டையிலே பாஷாணம் சரிநேரொக்க குறிப்புடனே தானிடித்துப் பூநீர்சேர்த்து
நாட்டமுடன் கண்ணாடி வாலைதன்னில் நயமுடனே சரக்கெல்லாம் வாலையிட்டு
பாட்டமென்ற  யடிப்பானைக்குள்ளேபோட்டு பாகமுடன் திராவகத்தை இறக்கிக்கொண்டு
நீட்டமுடன் நீவங்கமுருகும்போது நீதான திராவகத்தை வூத்திடாயே

விளக்கவுரை :


2777. ஊத்தையிலே வங்கமது கட்டிப்போகும் வுத்தமனே நீர்வாங்கி வெட்டையாகும்
கூத்தனென்னும் திராவகத்தால் வங்கந்தானும் குடியோடும் நீர்தானும் எகிரிப்போகும்
சாத்தலென்னும் வுக்ரகம் செய்யலாகும் சார்பான கருக்களே பாச்சலாகும்  
நீத்தமுடன் கருத்தட்டு வார்க்கும்போது நிலையான வுருக்களெல்லாம் தோன்றும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2778. பாரேதான் இன்னமொரு கருமானங்கேள் பாகமுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
நேரேதான் இரும்பினுட மணலைவாரி நேர்புடனே மூசையிட்டு வுருக்கும்போது
சீரேதான் கண்விட்டு ஆடும்போது சிறப்பான திராவகத்தை குத்திப்பாரு
நேரேதான் இரும்பதுவும் வெட்டையாகி நேர்புடனே கருவுக்குள் பாயுந்தானே

விளக்கவுரை :


2779. தானான வுத்திரண்டு பாயும்போது தனியான இரும்பதுவும் சவளைபோலாம்
தேனான இரும்பதுவும் சவளையாகும் தெளிவான வுருக்கினத்து வெட்டையாகும்
மானான தங்கம்போல் கண்விட்டாடும் மார்க்கமுடன் இரும்பினுட வேதைமார்க்கம்
கானான தேசத்தார்கள் சீனத்தார்கள் கருவாளி யாகையினால் கண்டார்தாமே

விளக்கவுரை :


2780. தாமான குளிகையொன்று சொல்லக்கேளும் தாக்கான சாதிக்காய் கிராம்போடேலம்
காமான மராட்டியமா மொக்கினொடு கருவான ஏலக்காய் லவங்கப்பட்டை
பாமான குரோசானி யோமந்தானும் பாங்கான பத்திரியும் மிளகுதானும்
வாமான மென்றதொரு கச்சூர்தானும் வாகான பச்சையென்ற பூரமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar