2981. அச்சென்ற தேகமது
நித்யாநித்தம் அப்பனே யாமறிந்த வரைக்குஞ் சொல்வோம்
மூச்சடங்கி எனதையர்
காலாங்கிநாதர் மூன்றுயுக கோடிவரை சீனந்தன்னில்
பேச்சொன்று மில்லாமல்
சாமாதிதன்னில் பிணம்போல இருந்தாரே சிலதுகாலம்
வாச்சலுடன்
வாசிதனையடக்கிக்கொண்டு வையகத்தில் சிலதுநாளா இருந்திட்டாரே
விளக்கவுரை :
2982. இருந்திட்ட் காலாங்கி
தம்மைப்போல எழிலான சித்தர்முனி ரிஷிகளெல்லாம்
பொருந்தியே பூவுலகில்
வாசிகொண்டு பொன்னுலக நாட்டுக்கு போனார்தாமும்
திருந்தியே ஒருவருந்தான்
இருந்ததில்லை சிறப்புடனே வைகுண்டஞ்சேர்ந்தாரங்கே
வருந்தியே அழைத்தாலும்
வருவதுண்டோ வருங்காலந் தானிருந்தால் வருகுந்தானே
விளக்கவுரை :
[ads-post]
2983. தானேதான் இன்னமொரு
புராணஞ்சொல்வேன் தாக்கான சீனபதிதன்னில் யானும்
காலான கமலமுனி சமாதிபக்கல்
காத்திருந்தேன் வெகுகோடி காலமப்பா
தேனான கமலமுனி சீஷரென்போர்
தேவனிட சமாதியிடங்கண்டேன்யானும்
பானான சமாதிக்கு முன்னதாக
பட்சமுடன் தாமிருந்தார் பண்பதாமே
விளக்கவுரை :
2984. பண்பான சீஷவர்க்கந்தன்னைக்
கன்டேன் பட்சமுடன் அவரைக்கேள்விகேட்டேன்
திண்பான சீஷர்களும் அதிதஞ்சொன்னார்
திகழான வதிதமது என்னவென்றால்
ன்பான முதற்சீஷன்
சொன்னமார்க்கம் வாகுடனே வருஷமது கொன்டுசெய்தேன்
கண்பான இரண்டாங்கால்
சீஷன்தானும் கனமுடனே மூனாண்டு தொண்டனாமே
விளக்கவுரை :
2985. தொண்டனாம் மூன்றாங்கால்
சீஷன்தானும் சோர்வின்றி நாலாண்டு தன்னில்தானும்
விண்டமுடன் நாலாங்கால்
சீஷன்தானும் விருப்பமுடன் நாலாவதாண்டுமட்டும்
கண்டிதமாய் ஐந்தாங்கால்
சீஷன்தானும் கருத்துடனே வாறாண்டு தன்னில்மட்டும்
அண்டிடவே ஆறாங்கால்
சீஷன்தானும் அப்பனே ஐயிரண்டு பத்துமாண்டே
விளக்கவுரை :