2951. மேவவே யின்னமொரு
தெரிசனங்கேள் மேன்மையுடன் யான்கண்டவரைக்குஞ்சொல்வேன்
காவலுட
ரோமரிஷிதன்னைக்கண்டேன் கருவாக வைகுண்டந்தன்னிலப்பா
ஆவலுடன் அவர்பக்கல்
யானுஞ்சென்றேன் அப்பனே கேள்விகள் அனேகமுண்டு
பாவமெனும் புண்ணியங்க
ளிரண்டைத்தானும் பராகரித்துக் கேள்விகளும் கேட்கலாச்சே
விளக்கவுரை :
2952. கேட்கவென்றால் அவர்மீதில்
குற்றமெத்தக் கேள்விகளுமங்குண்டு சொல்லொணாது
நீட்கமுடன் சாத்திரத்தை
வெகுவாய்ச்சொல்லி நீடாழியுலகமெலாம் மயங்கப்பண்ணி
தாட்கையுடன் ரோமரிஷி
கோர்வையாவும் தன்மையுடன் முன்பின்னாய் பாடிவைத்தார்
மீட்கமுடன் கோர்வைதனில்
நாலுகாப்பு மாளவே முன்பின்னாய்ப் பாடினாரே
விளக்கவுரை :
[ads-post]
2953. பாடினார் பரிபாஷை யாவுஞ்சொல்லி
பாடல்களில் கைமறைப்பு வதீதஞ்சொல்லி
மூடியே
கருவுளவுமுப்பின்மார்க்கம் மூதண்டப்பூநீரின் போக்குயாவும்
தேடியே பரிபாஷை
திரட்டையெல்லாம் தெளிவறவே செய்யாத மார்க்கந்தன்னில்
கோடிமனு சுட்டலைந்து
கெட்டுப்போனார் குவலயத்தில் பாவம்வந்து நேரலாச்சே
விளக்கவுரை :
2954. நேரவே பாவத்தாலஃ கருமந்தங்கி
நெடிதான வைகுண்டப்பதியிற்சென்று
கூரவே எமதர்மராஜன் பக்கல்
கொற்றவனாம் ரோமரிஷி தன்னைத்தானும்
பாரமுடன் சாத்திரத்தை
தலைமேல்வைத்து பாங்குடனே தூதர்கொண்டு சென்றுபோனார்
மாரலுடன்
வைகுண்டப்பதியில்தானும் மார்க்கமுடன் குற்றமது நேமித்தாரே
விளக்கவுரை :
2955. நேமித்தார் குற்றமதை நேரதாக நெடுங்காலம் தானிருக்க விடையுண்டாச்சு சாமியுட
பக்கலிலே யனேகஞ்சித்தர்
சதகோடி சூரியர்போல் கொண்டுவந்தார்
வாமியுடன்
வைகுண்டப்பதியில்தானும் வாகுடனே யம்பாளும் தானிருக்க
பூமியிடங் கொண்டுவந்த
சித்தர்தானும் புகழ்ச்சியுடன் கோடியுடன் லக்கில்லைதானே
விளக்கவுரை :