போகர் சப்தகாண்டம் 2976 - 2980 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2976 - 2980 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2976. தானேதான் ராஜாதிராஜரெல்லாம் தாரிணியில் சாத்திரத்தை மிகவறிந்து  
மானமுடன் சிவயோகநிஷ்டைநின்று மானிலத்தில் தவசுபெரியோரைப்போல
தேனமிர்தங் கொண்டுமல்லோ வாசிபூட்டி தேசத்திலிருந்தார்கள் சித்தரெல்லாம்
மேனகையைக் கண்டுமல்லோ மையல்கொண்டு மேதினியில் மாண்டவர் கோடியாமே

விளக்கவுரை :


2977. கோடியாஞ் சித்தர்முனி மாந்தரெல்லாம் குவலயத்தில் மண்ணாசை பெண்ணாசையாலே
தேடியே செம்பொன்னாசையாலும் திடங்குலைந்து மாண்டார்கள் மாந்தரெல்லாம்
நாடியே நாதாந்த சித்தருக்கு நல்லவழி யொருவருக்கும் கிடைப்பதில்லை 
பாடியே நூல்தனைப் பார்த்துபார்த்து பரதவித்து இருந்தார்கள் கோடிபேரே  

விளக்கவுரை :

[ads-post]

2978. பேரான தத்துவங்கள் அறிந்துமென்ன பேருலகில் ஞானிகளாயிருந்துமென்ன
நேரான நல்லவழி தெரிந்துமென்ன நேர்மையுடன் அறியாமல் இருந்துமென்ன
கூரான சாத்திரத்தைக் கற்றுமென்ன குவலயத்தில் வெகுகால மிருந்துமென்ன
தூரான கெட்டவழி சென்றுமென்ன துறையோடு காலம்வரை யொன்றுங்காணே

விளக்கவுரை :


2979. காணவே பிரபஞ்ச வாழ்க்கையாவும் கருத்துடனே கொண்டவர்க்கு ஒன்றுமில்லை
தோணவே நூலாதி நூல்கள்தோறும் துடர்ந்துமே சடலமது இறக்கவென்று
மாணவே சித்தர்முனி ரிஷிகளெல்லாம் மாராட்டமாகவல்லோ நூல்செய்தார்கள்
வேணவே காலாங்கி நாதர்தம்மால் கண்டறிந்த யான்சொல்வேனே

விளக்கவுரை :


2980. சொல்லவென்றால் பூலோகம் இடங்கொள்ளாது சுருதிபொருள் சாத்திரங்கள் மிகவும்பொய்யாம்
வெல்ல்வே மெய்யொன்றும் புகலவில்லை ஈலே சாத்திரத்தை பாடிப்போட்டார்
அல்லலுடன் தேகாதி தேககாலம் அலைச்சலுடன் சாத்திரத்தை பார்த்து மாண்டார்
கொல்லனது ழீதியிலே வூசிவிற்ற கொடிதான கதைபோல என்முன்னாச்சே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar