2816. கருதுவார் நாதாக்கள் கணக்குங்காண்பார் கண்டறிந்து பிரணவத்தை யுரைப்பார்தாமும்
சுருதிபொருள் நால்வேத
சாஸ்திரத்தின் சூட்சாதி சூட்சமெல்லாம் சுட்டிக்காட்டி
பருதிமதி கேசரத்தின்
குளிகைமார்க்கம் பட்சமுடன் காண்பித்து வுளவுஞ்சொல்லி
நிருதியென்னும் திசைநோக்கு
வழியுங்காட்டி நீதியுடன் ஞானோபமோதுவாரே
விளக்கவுரை :
2817. ஓதுவார் பொருளறிந்த
கள்ளனானால் உத்தமனே யவர்மனதை தேத்திநீதான்
நீதியெனும் சன்மார்க்க
வலையிற்சென்று நித்தமுடன் பெரியோர்க்கு தொண்டுபண்ணி
சாதியிலே தாழ்ந்தவரா
யிருந்திட்டாலும் தவநிலையில் பெரியவரா மென்றேயெண்ணி
பாதிமதி சடையணிந்த
தம்பிரான்போல் பாலித்தா லுந்தனுக்கு பண்பதாமே
விளக்கவுரை :
[ads-post]
2818. பண்பான உந்தனுக்கு
விட்டகுறைதானும் பாருலகில் லபிக்குமடா முன்சென்மத்தால்
திண்பான தேகமது கற்றூணாக
திறமையுட னெந்நாளு மிருப்பதற்கு
நண்பாக முன்சொன்ன
சூதவெண்ணெய் நாதாக்கள் முறைப்படியே சொன்னேன்யானும்
கண்பான யேமரச வெண்ணெய்தன்னை
கருவாக செந்தூரஞ் செய்துபாரே
விளக்கவுரை :
2819. பாரப்பா சூதமென்ற
செந்தூரத்தை பாலகனே முறையோடு செய்தாயானால்
நேரப்பா யுனைப்போல
வுலகிலுண்டோ நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
தீரப்பா வெண்ணெயது
ஒன்றேகாலாம் திரமான கெந்தியது முக்காலாகும்
கூரப்பா சாரமென்ற
செயநீர்தன்னால் கொற்றவனே தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
2820. நாலான சாமமது வரைத்துமைந்தா
நாயகனே ரவிதனிலே காயப்போடு
பாலான மேருவென்ற
குப்பிக்கேற்றி பாலகனே தானெரிப்பாய் சாமம்நாலு
நூலான முறைப்படியே
எரித்தாயானால் நுணுக்கமுடன் செந்தூர மென்னசொல்வேன்
சேலான செந்தூரம் பதனம்பண்ணு
செம்மையுடன் போக்குவகை செப்பக்கேளே
விளக்கவுரை :