2756. வளமையா மின்னமொரு பாகங்கேளு மகத்தான நாதாக்கள் கூறவில்லை
இளமையாம் போகரிஷி
யடியேன்தானும் எழிலாகக் கூறுகிறேன் பற்பதாக
களமைதாம் சூதமது
சேரொன்றாகும் கனமான கண்டரது சேரொன்றாகும்
தளமையாம் நிம்பழத்தின்
சாற்றாலாட்டி தாழ்மையுடன் தாழ்மையுடன் தானரைப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :
2757. எட்டான சாமமது வரைக்கும்போது
என்மகனே சூதமது மடிந்துமல்லோ
கட்டான சூதமது
வெண்ணெய்போலாம் கசடான கண்டரது நீக்கியேதான்
திட்டமுடன் வெண்ணெயது
கல்வமிட்டு திறமாகத் தானரைப்பாய் தகரச்சாற்றால்
சட்டமுடன் எண்சாமம்
அரைக்கும்போது சார்பான சூதமது வெண்ணெயாமே
விளக்கவுரை :
[ads-post]
2758. வெண்ணெயாம் சூதமுடன்
கருவூமத்தை விருப்பமுடன் பிசறியரைக்கும்போது
கண்மையுடன் வெண்ணெயது
மடிந்துபோகும் கருவான ராசனென்ற வெண்ணெயாச்சு
திண்ணமுடன் சூதமது
வெண்ணெயானால் திறமான லோகத்தி லனந்தம்வேதை
கண்ணமுடன் செந்தூரம்
பண்ணக்கேளும் கழலான வேதையிது கோடியாமே
விளக்கவுரை :
2759. கோடியாம் வேதையிலே
செந்தூரங்கேள் குறிப்பான கெந்தியது வரைக்குப்பாதி
நாடியே சீலையதுவும்
ஒன்றுக்குக்கால் நலமான வீரமது வரிக்காலுக்கொன்று
தேடியே வாறுவகை
செயநீர்தன்னால் தெளிவாகத் தானரைப்பாய் நாலுசாமம்
வாடியே திரியாதே மன்னாபாரு
மார்க்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலே
விளக்கவுரை :
2760. நாலான சாமமது வரைக்கும்போது
நாயகனே சூதமது மடிந்துசாகும்
காலான ரவிதனிலே வைத்துக்
கனமாகப் பொடிபண்ணிஎடுத்துக்கொண்டு
சாலான குப்பிக்குச் சீலையேழு
சார்பாகத் தான்செய்து வாயைவிட்டு
பாலான குப்பிக்குள்
மருந்தைவிட்டு பாலகனே மாக்கல்லால் கொண்டுமூடே
விளக்கவுரை :