2866. தானான சாபமது சொல்லும்போது
தன்மையுடன் குளிகைபூண்டு வந்தேன்சாமி
கோனான எனதையர் காலாங்கிநாதர்
குருபதத்தை வணங்கிநித்தம் விடையுங்கேட்டு
பானான பராபரியாளு
ரையுங்கேட்டு பட்சமுடன் சத்தசாகரமுங்காண
நானான போகரிஷி வருகும்போது
நளினமுடன் தெரிசனங்கள் கிடைக்கலாச்சே
விளக்கவுரை :
2867. கிடைத்தென்று சொல்லுகையில்
அடியேன்தானும் கீர்த்தியுடன் உரைக்கசாமியப்போ
படைத்தலைவர் கிங்கிலியர்
ஆயிரம்பேர் பாங்குடனே இந்திரனைச் சூழ்ந்திருக்க
உடைபூண்ட பெண்களுடன்
கோடாகோடி உத்தமரைச் சூழ்ந்துகொண்டு தானிருந்தார்
நடைநொடி ரம்மையுடன்
மெல்லிதானும் நாட்டியமா மேனகையு மிருந்ததாமே
விளக்கவுரை :
[ads-post]
2868. தாமுடனே திலோத்தமையும்
ஊர்வசியுந்தானும் தகமையுடன் கொலுக்கூட மங்கிருந்தார்
நேமமுடன் தபோதனர்கள்
கோடாகோடி நேர்மையுடன் கைலாசகிரியில்தானும்
வாமமுடன் தவசிருப்பார்
லக்கோயில்லை வாகுடனே ரிஷிகூட்ட மனேகந்தானும்
சேமமுடன் இந்திரனோடிருக்கக்
கண்டேன் சேனவதிசயங்களெல்லாம் தெளிந்திட்டேனே
விளக்கவுரை :
2869. தெளியவே யடியேனும்
காத்திருந்தேன் தேவேந்திர பகவானு மெந்தனுக்கு
எளியனா மெந்தனுக்கு
கிருபைவைத்து எந்தனது பதிதேடி வந்ததாலே
வெளியாங்கமாகவேதான்
சாமிதானும் வேடிக்கை வினோதமெல்லாம் காண்பித்தேதான்
ஒளியான ஜோதியென்னும்
ஆசீர்மத்தில் உத்தமனே இடதுபக்கம் இடம்தந்தாரே
விளக்கவுரை :
2870. தந்தவுடன் அடியேனும்
அங்கிருந்து சதகோடி சூரிய சிம்மாதனத்தில்
சொந்தமுடன் சுகித்திருந்து
கேள்விகேட்டு கேள்விக்கு வுத்தார விடையுஞ்சொல்லி
அந்தமுடன் தேவர்களின்
பக்கம்போய் அந்தரலோகத்து மர்மமெல்லாம்
விந்தையுடன் தானறிந்தேன்
வினோதமெல்லாம் விருப்பமுடன் தானுரைப்பேன் மகிமைகேளே
விளக்கவுரை :