போகர் சப்தகாண்டம் 2621 - 2625 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2621 - 2625 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2621. வறைந்திட்டேன் பஞ்சபூதம் செப்பக்கேளு வகையான லோகமது வஞ்சுமங்கூட்டி
துரைந்திட்டேன் தங்கமது ஒன்றேயாகும் துறையான வங்கமது ஒன்றேயாகும்
பரைந்திட்ட செம்பதுவும் ஒன்றேயாகும் பாலகனே இரும்பதுவும் ஒன்றேயாகும்
கறைந்திட்ட நாகமது நான்கேயாகும் கருவான லோகமது வஞ்சுங்கூட்டே  

விளக்கவுரை :


2622. கூட்டியே தானுருக்கிக் உடுத்துப்பாரு கூறுவேன் கிராசமது சாற்றக்கேளு
தாட்டிகமாய் அரிதாரம் களஞ்சியாறு தாக்குவாய் கிராசமது தன்னிலீவாம்
வாட்டமுடன் மளங்கமது போலேயாகும் வாகான களங்கமது சிவப்புசெய்ய
மாட்டிமையாய் சூதமென்ற ராஜாதன்னை மயங்காமல் கெந்தியது ஒக்கக்கூட்டே

விளக்கவுரை :

[ads-post]

2623. கூட்டியே செந்தூரம் செய்யக்கேளும் குறிப்பான பாண்டமது கொண்டுவந்து
நாட்டமுடன் வுப்புதனை கீழ்மேலிட்டு நளினமுடன் நடுமையம் காரமிட்டு
வாட்டமுடன் கெந்தியது மேலேபோட்டு வளமாக நடுமையம் சூதமிட்டு
தீட்டமுடன் மேலுமந்த வுப்பைக்கொட்டி திறமாக மேல்மூடி சீலைசெய்யே

விளக்கவுரை :


2624. செய்யவே ரவிதனிலே காயவைத்து சிறப்பாக வாலுகையி னடுப்பிலேத்தி
உய்யதே தீமூட்டு எட்டுசாமம் உத்தமனே தானெரிப்பாய் மைந்தாகேளு   
பையவே யாறினபின் னெடுத்துப்பாரு பாகமுடன் செந்தூரமாகுமப்பா  
தொய்யவே செந்தூரங் களங்குபாதி துறையோடும் முறையோடும் அரைத்திடாயே

விளக்கவுரை :


2625. அரைக்கையிலே தும்பையென்ற பூண்டினாலே அப்பனே நாற்சாமமரைத்தபோது
நிரைக்கையிலே மனம்போலாகும்பாரு நேர்மையுடன் ரவிதனிலே காயவைத்து
திரைக்கமுடன் கல்வத்தில் பொடியாய்ச் செய்து திறமுடனே காசியென்ற குப்பிதானும்
வரைக்கமுடன் குப்பிக்குச் சீலையேழு வாகுடனே வாலையிட்டுச் சீலைசெய்யே 

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar