போகர் சப்தகாண்டம் 2561 - 2565 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2561 - 2565 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2561. பூசவே களஞ்சிக்கு குன்றிதானும் பொலிவாகத் தானெடுத்துப் பூசிப்போடு
ஆசலுடன் பூங்காவி தன்னிற்குள்ளே வப்பனே புடம்போட மாற்றுகாணும்
கூசாமல் மூன்றுபுடம் போட்டாயானால் குறையாது சரிநிறையும் ஏகாதப்பா
தாகமுடன் மூன்றுமுறை போட்டபோது தப்பாது வாணிக்குப் பத்துமாத்தே

விளக்கவுரை :


2562. மாத்தான தங்கமது வாணித்தங்கம் மகத்தான தங்கமது வுருகிப்பாரு
கூத்தான காச்சலுக்கு சுலாய்ப்புகாணும் குவலயத்தில் சித்தர்முனி செய்யும்வேதை
சாத்தலுடன் கருவானிலாண்டான்பாரு சாங்கமுடன் பின்னொருவர் காணுவாரோ
நீத்தலுடன் விட்டகுறை நேர்ந்தோன் காண்பான் நீனிலத்தில் மற்றொருவர் காணாராமே

விளக்கவுரை :

[ads-post]

2563. ஆமேதான் செந்தூரம் குன்றியுண்ணு அப்பனே காயாதி கற்பமாச்சு
தாமேதான் சமாதிக்கு இடமுமில்லை தாக்கில்லை நோக்கில்லை தேகம்போகா
வாமேதான் வாசியது கீழ்நோக்காகும் வளமான யோகத்தி லிருக்கலாகும்
போமேதான் தேகமது கற்றூணாகும் போக்கான மேனியது சண்ணாதன்றே

விளக்கவுரை :


2564. சண்ணது இன்னமொரு பாகங்கேளு சார்வான லோகமது செந்தூரந்தான் 
பண்ணாது பண்ணுவார் மாந்தரப்பா பாரினிலே சித்தர்கை மறைப்புகாணார்
தண்ணமுடன் காலாங்கிநாதர்பாதம் தாக்குடனே யான்வணங்கி கூற்றலுற்றேன்
வண்ணருடன் அயமதுவும் ராவிமைந்தா வளமையுடன் தான்செய்த வகைதான்கேளே

விளக்கவுரை :


2565. வகையான லோகமது சேர்தானப்பா வாகுடனே தானெடுத்து சாற்றக்கேளு
தொகையான சீனமென்ற காரந்தன்னால் துப்புரவாய் தானரைத்து கழுவிப்போடு
தகையான பால்நண்டு சாமம்நாலு தாக்குடனே தானரைப்பாய் மைந்தாகேளு
பகையான பில்லைதன்னை ரவியிற்போடு பாகமுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்யே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar