போகர் சப்தகாண்டம் 2536 - 2540 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2536 - 2540 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2536. பாடினேன் இன்னமொரு பாகங்கேளு பாங்கான கோமேதம் புஷ்பராகம்
தேடியே வப்ரேகம் பச்சைசெம்பு சிறப்பான வயிரமது சங்குமுத்து
கூடியே பவளமது நவதாதாகும் கொப்பெனவே யாறுவகை செயநீர்தன்னால்
நீடியே சமனெடையா யெடுத்துக்கொண்டு நேர்மையுடன் தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


2537. நாலான சாமமது வரைத்துமைந்தா நலமுடனே பில்லையது தட்டியேதான்
கோலமுடன் ரவிதனிலே காயவைத்து குறிப்பாக ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
ஞாலமுடன் சீலையது காய்ந்தபின்பு நளினமுடன் கனயெருவிற் புடத்தைப்போடு
தாலமுடன் புடமாறி யெடுத்துப்பார்க்கத் தவளநிற பற்பமது காந்தியாச்சே   

விளக்கவுரை :

[ads-post]

2538. ஆச்சென்று விடுகாதே மைந்தாகேளு அப்பனே சொர்ணமென்ற பற்பந்தானும்
மாச்சலுடன் நாலுக்கோர் நவநீதவித்தை மாட்டடா விரண்டுமொன்றாய்க் கல்வமிட்டு
காச்சலுடன் ஆறுவகை செயநீர்தன்னால் கருத்துடனே தானரைப்பாய் நாலுசாமம்
மூச்சடங்கத் தானரைத்து வில்லைதட்டி முயலவே ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :


2539. போடவே பில்லையது காய்ந்தபின்பு பொங்கமுடன் ஓட்டிலிட்டுச் சீலைசெய்து
நீடவே கோழியென்ற புடத்தைப்போடு நீணிலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
தேடவே காயாதி கற்பந்தேர்ந்தாலும்  யாருந்தான்சொல்லவில்லை
பாடவே பலநூலுங் கண்டாராய்ந்து பாலித்தேன் லோகத்து மாந்தர்க்காமே

விளக்கவுரை :


2540. ஆமேதான் பற்பமுறை யாருஞ்சொல்லார் அப்பனே மானிடர்கள் பிழைக்கவென்று
நாமேதான் பலநூலுங் கண்டாராய்ந்து நளினமுடன் பாடிவைத்தேன் சத்தகாண்டம்
போமேதான் வீணிலே மனம்செல்லாமல் பொங்கமுடன் இப்பாகஞ் செய்தாயானால்
மாமான காயகற்பமிது தானாகு மகத்தான பற்பமது நலிலொண்ணாதே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar