போகர் சப்தகாண்டம் 2516 - 2520 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2516 - 2520 of 7000 பாடல்கள்


bogar-saptha-kaandam

2516. பத்தான கடைசரக்கு சாற்றக்கேளு பாங்கான சுக்கதுவும் களஞ்சியெட்டு
முத்தான மிளகதுவும் களஞ்சியாறு முயலான பரங்கியது களஞ்சியெட்டு
மத்தான லவங்கமது களஞ்சிநாலு மகத்தான சாதிக்காய் களஞ்சிரண்டு
சித்தான ரோசனையும் களஞ்சியாறு சிறப்பான வாள்மிளகு களஞ்சிமூன்றே

விளக்கவுரை :


2517. மூன்றான மிளகுடனே கருவாய்ப்பட்டை மூர்க்கமாய் கருஞ்சீரகம் களஞ்சிரண்டு
தான்றான பத்திரியும் களஞ்சியொன்று தருவான தக்கோலம் களஞ்சிரண்டு
கான்றான கார்கோலங் களஞ்சியொன்று கருவான மாசிக்காய் களஞ்சிரண்டு
பான்றான தேசாவரம் களஞ்சியொன்று பாகமுடன் வாய்விளங்க ரெண்டாய்ச்சேரே

விளக்கவுரை :

[ads-post]

2518. சேர்க்கையிலே வசம்பதுவும் களஞ்சியொன்று செயலான சேங்கொட்டை களஞ்சியொன்று
மார்க்கமுடன் கடுக்காய்த்தோல் களஞ்சிரண்டு மருவான கருஞ்சீரம் களஞ்சியொன்று
தீர்க்கமுடன் நற்சீரம் களஞ்சியஒன்று திடமான சிறுதேக்கு களஞ்சியொன்று 
ஏர்க்கவே தாளகமும் களஞ்சியெட்டு எழிலான முந்திரி களஞ்சிரண்டே

விளக்கவுரை :


2519. இரண்டான எள்ளுடனே களஞ்சிரண்டு இயலான ஓமமுடன் களஞ்சிரண்டு
பண்டான கொள்ளுடனே களஞ்சியொன்று பாங்கான எட்டிவிரை களஞ்சியொன்று
குண்டான தேற்றான்விரை களஞ்சிரண்டு கொடிதான கொடிவேலி களஞ்சியொன்று
திண்டான வாலுழுவை களஞ்சியொன்று திறமான சோம்பதுவும் களஞ்சிநாலே  

விளக்கவுரை :


2520. நாலுடனே திப்பிலியும் களஞ்சியொன்று நலமான கஸ்தூரி களஞ்சியொன்று
பாலுடனே குங்குமப்பூ களஞ்சியொன்று பாங்கான கோடியது களஞ்சிநாலு
சேலுடனே முத்தமது களஞ்சிரண்டு செழிப்பான தான்றிக்காய் களஞ்சிநாலு
காலுடனே நெல்லியது களஞ்சிரண்டு கருவான முள்ளியது களஞ்சியாறே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar