போகர் சப்தகாண்டம் 2681 - 2685 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2681 - 2685 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2681. பொன்னான பொன்னுக்கு சரிநேர்தங்கம் பூட்டடா யெடைக்கிடைதான் தங்கஞ்சேரு
மன்னாகேள் மாற்றதுவும் எட்டரையாகும் மகத்தான பொன்னதுவும் சிவப்புமெத்த
தென்பொதிகை தனில்வாழும் சித்தர்யாவும் தெளிந்துமே கெந்தகத்தின் மார்க்கங்கொண்டார்
வின்னமில்லா பொன்னதுவும் சித்தர்வேதை விருப்பமுடன் பாடிவைத்தேன் காண்டமேழே

விளக்கவுரை :


2682. காண்டமா மின்னமொரு கருமானங்கேள் கருத்துடனே யாமுரைப்போம் மாணாகேளு
தீண்டாத பாஷாணம் சேர்தான்வாங்கி திறமான கொடிகள்ளி சார்தானப்பா
மாண்டுமே பாஷாண வெண்ணெய்போக மார்க்கமுடன் சுறுக்கதுவும் எட்டுசாமம்
ஆண்டதுவும் நூறுவயதானவேம்பு அப்பனே பட்டையது சீவிக்கொள்ளே

விளக்கவுரை :

[ads-post]

2683. கொள்ளவே பட்டையது தயிலம்வாங்கி கொப்பெனவே தயிலமது சுறுக்குதாக்கு
விள்ளவே சுறுக்கதுவும் எட்டுசாமம் விருப்பமுடன் தான்கொடுத்து எடுத்துப்பாரு
மெள்ளவே கட்டியது புகையடங்கி மேன்மையுடன் பாஷாணமிருகிக்காட்டும்
தள்ளவே சிவனாரின் வேம்புதானும் சாங்கமுடன் சுருக்கிட்டு நீற்றிப்போடே

விளக்கவுரை :


2684. நீற்றியபின் னாவியெல்லாம் வெளிபோகாமல் நேர்பாகச் சட்டியால் மூடிப்போடு
ஆற்றியபின் மருந்தெடுத்து காயப்போட்டு அப்பனே மறுசீலைக்குள்ளே வைத்து
சாற்றியபின் முன்போல நீற்றுநீற்று சாதகமாய் பதினொருக்கால் நீற்றுநீற்று
மாற்றியபின் மருந்தெடுத்து அண்டோட்டிலிட்டு வளமாக மேல்மூடி சீலைசெய்யே

விளக்கவுரை :


2685. செய்திட்டு ஐந்தெருவிற் புடத்தைப்போடு திரமாகச் சவர்க்காரச் சுன்னமாகக்
கொய்திட்ட சித்தரெல்லாம் வழழைதன்னை குவிழ்ந்தபடி சொல்லாமல் மறைத்துப்போட்டார்
உய்த்திட்டு பிள்ளைகள் தன்னைப்பார்த்து வுலகத்தோர் கரிகொள்ள காசில்லாமல்
எய்திட்டு ஏங்கியே வருமைபூண்டு இறந்திறந்து போனவர்கள் கோடிதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar