போகர் சப்தகாண்டம் 2706 - 2710 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2706 - 2710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2706. மாட்டியே உமிப்புடமாம் தன்னிலிட்டு மயங்காதே மன்னவனே எடுத்துப்பாரு
தாட்டிகமாய் சோடசமாய் புடந்தானப்பா சாங்கமுடன் முன்சொன்ன படியேபோடு
நீட்டமுடன் லிங்கமது வுறுதிக்கட்டும் நெடுங்கம்பி லிங்கமது வுறுகிப்பாயும்
வாட்டமுடன் செந்தூரஞ் செய்தாயானால் வாகான வேதைமுகங் காணலாமே

விளக்கவுரை :


2707. காணலாம் சதகோடி சூரியன்போல் தாக்கான பிரகாசமானசோதி
நீணவே லிங்கமது என்னசொல்வேன் நிலையான கவனசுத்தி குளிகையென்பார்
தோணவே மதியுடனே ஏழுங்கூட்டி தோராமல் செம்பதுவும் மூன்றுங்கூட்டி
பூணவே தங்கமது ஒன்றுகூட்டி புண்ணியனே மூசைதனி லுறுக்கிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2708. உறுக்குமுகந் தானறியார் மூடர்பாதி வுலகுதனில் மெத்தவுண்டு வுரைக்கக்கேளு
நெருக்கமுடன் லோகமது வுருகும்போது நேர்புடனே குருவொன்று தன்னையீவாய்
தெறுக்கமுடன் கணம்விட்டு ஆடும்போது தேரான காரமதை யின்னுமீவாய்
செறுக்குடனே கரிபோல யிருக்கும்பாரு செம்மைபெற வோட்டில்வைத்து வூதிப்போடே

விளக்கவுரை :


2709. போடவே மூன்றுமுறை வூதிப்போடு பொன்னவனே பொன்போலே மாற்றுகாணும்
நீடவே மாற்றாறு காணும்பாரு நிலைத்துதடா வாதவித்தை நிசமாச்சு
கூடவே தங்கமது ஒன்றுகூட்டி குறிப்பாக வாரடித்துப் புடத்தைப்போடு
ஆடவே சீவனத்துக் கிடமேசென்று அப்பனே அருந்தவசில் நின்றிடாயே

விளக்கவுரை :


2710. நிற்கையிலே வாணிவந்து நிர்த்தஞ் சொல்வாள் நிராமயத்தின் சோதியது சொரூபந்தோன்றும்
துற்கையென்னுங் காளியவள் ஒதுங்கிநிற்பாள் துரைராச சுந்தரன்போல் சித்தனாவாய்
பற்குணன்போல் வீராதி வீரனாய் பாருலகில் வுன்னையொரு ரிஷியென்பார்
அற்பமென்று நினையாதே வருள்மைந்தாகேளு அருந்தவச நிலைதனையே நாடிக்கொள்ளே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar