போகர் சப்தகாண்டம் 2591 - 2595 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2591 - 2595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2591. நடுங்குவார் பற்பத்தின் நேர்மைகாணார் நாட்டிலே யாம்கண்ட வளமையப்பா
அடுங்கவே பற்பத்தை கண்டாராய்ந்து அப்பனே நாமுரைத்தோம் அவனியோர்க்கு
தடுக்கவே பற்பத்தை செம்பிலீய சண்ணுமே வூகலென்ற நாற்றம்போகும்
ஒடுங்கவே பத்துக்கு ஒன்றுதானும் உத்தமனே குருதனையே தாக்கிடாயே   

விளக்கவுரை :


2592. தாக்கவே ரவிதானுங் கட்டிப்போகும் தகைமையுடன் செம்பதுவும் வூறலேகி
நோக்கமுடன் செம்பதுவும் வர்ணங்காட்டும் நேராக வசம்புநிகர் வெள்ளிசேர்த்து
பாக்கவே வந்திடைக்கு தங்கஞ்சேர்த்து பாண்மையுடன் தானுருக்கி யெடுப்பாயானால்
தூக்கமுடன் மாற்றதுவும் மிகவுமாகி துப்புறவாய் தங்கமது காணும்பாரே

விளக்கவுரை :

[ads-post]

2593. காணவே பற்பத்தை யனுபானத்தில் பணவிடைதான் மண்டலங்கள் கொண்டுவந்தால்
தோணவே குன்மமென்ற தெட்டும்போகும் தோற்றாத வாய்வென்ற தெண்பதும்போம்
நாணவே பாண்டுவகை யாறுந்தீரும் நாடாது சூலை பதினெட்டும்போகும்
வேணவே மகோதரம் பீலிகையும்போகும் விருப்பமுடன் வயிற்றுவலி விம்மல்போமே

விளக்கவுரை :


2594. போமேதான் குடற்பிரட்டால் வாய்நீரூரல் குடல்வாதம் மனுர்வாதம் பட்சவாதம்
ஏமேதான் கண்டவலி கவுசுகட்டி வீக்கமுடன் நீரும்பல் விக்கல்போகும்
தேமேதான் பித்தமென்ற நாற்பதும்போம் திரளான மலட்டுவலி குடைச்சல்தீரும்
நாமேதான் சொன்னபடி யுப்பின்மார்க்கம் நாதாக்கள் சொல்லவில்லை நாம்சொன்னோமே

விளக்கவுரை :


2595. சொன்னோமே சித்தர்முனி சித்தர்தாமும் சூட்சாதி சூட்சமதை மறைத்துப்போட்டார்
என்னைப்போல் உப்பினிட மார்க்கந்தன்னை எடுத்துரைத்தார் நாதாக்கள் யாருமில்லை
தன்னைப்போல் வெகுளியதாய்ச் சொல்லிப்போட்டு தாறுமாறாகவல்லோ மறைத்துப்போட்டார்
இன்னம்வெகு கைமறைப்பு கண்டுதேர்ந்து எடுத்துரைத்தேன் உப்பினிட மார்க்கந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar