போகர் சப்தகாண்டம் 2426 - 2430 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2426 - 2430 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2426. கூட்டவே நாளாம்நாள் வென்னீராலே குமுறவே ஸ்தானமது செய்யவேண்டும்
நாட்டமுடன் அன்றுமுதல் நான்குநாளும் நலமாக விழுதியிலை பாலுங்கூட்டி
வாட்டமுடன் தானருந்தி அந்திசந்தி வாகாக ஏழாநாள் எண்ணெய்மூழ்க
நீட்டமுடன் மூன்றுசிறை  இப்படியே செய்ய நீணிலத்தில் கெற்பமது விளையும்பாரே

விளக்கவுரை :


2427. பாரேதான் வாணுக்கு மிந்தபாகம் பட்சமுடன்தானருந்த ரோகம்போகும்
சீரேதான் சிங்களுக்கு வைத்துநாளும் திறமையுடன் மூன்றுமுறை யுண்ணவேண்டும்
நேரேதான் பத்தியமுமுன்போற்காரு நேரானமேகமது கசரோகம்போல்
வாரேதான் காலாங்கிநாயர்பாதம் வணங்கியே போகரிஷி வரைந்திட்டேனே

விளக்கவுரை :

[ads-post]

2428. அறைந்தேனே பலசரக்குகளையாராய்ந்து அப்பனே மானிடர்கள் பிழைக்கவென்று
திரைந்திட்டேன் சூத்திரங்கள் உறுதிபார்த்து தெளிமையுடன் பலநூலும் பெருநூல்பார்த்து
குறைந்திட்ட சூட்சாதி சூட்சம்பார்த்து கூறினேன் சித்தர்நூலெல்லாம் பார்த்தேன்
முறைந்திட்டேன் இந்தவண்ணம் யாருஞ்சொல்லார் முயற்சியுடன் பாடிவைத்தேன் காண்டந்தானே

விளக்கவுரை :


2429. தானான காண்டத்தின் மூன்றாங்காண்டம் தகைமையுள்ள கருக்குருவும் யாவுஞ்சொன்னேன்
வேனான என்னையர் காலாங்கிநாயர் விருப்பமுடன் உபதேச மனேகஞ்சொன்னார்
கோனான வுபதேசம்யாவுங்கேட்டு கொட்டினேன் சத்தமென்ற காண்டமப்பா
பானான காண்டமேழாயிரந்தான் பாகமுடன் பாடிவைத்தேன் போகர்தாமே

விளக்கவுரை :


2430. தாமேதான் மொழிந்திட்டார் அனேகங்கோடி தகைமையுடன் கண்டறிந்தேன் சதாகாலந்தான்
வேமேதான் சித்தர்முனி ரிஷிகளப்பா வெனைப்போல யாருந்தான் சொல்லவில்லை
சாமமுடன் நூல்களெல்லாஞ் சாபஞ்சொன்னார் சாங்கமுடன் வுளவுகரு சொல்லவில்லை
நாமமுடன் அடியேனும் விரித்துரைத்தேன் நலமாக சீனபதியுலகத்தோர்க்கே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar