2916. என்றையிலே பாண்டியனும்
திடுக்கிட்டேங்கி எழிலான பாலகரை தேடச்சொல்லி
குன்றுமலை கடலோரஞ்
சுனையோரந்தான் கொற்றவனாம் அதிகாரி சொற்படிக்கு
தென்றிசையிற் போதிகவரை
துலைதேசந்தான் தொடர்ந்துமே யாராய்ந்து பார்த்தோமென்ன
வென்றிடவே வந்தவருஞ்
சித்தரல்ல வேதாந்தசாமி குருநாதர்தானோ
விளக்கவுரை :
2917. நாதனென்றால் கண்ணுக்கு
தென்படாது நாதாந்த கருவானால் கண்ணிற்றோற்றும்
போதமுடன் சித்தான குருவதாமோ
பொங்கமுடன் கைலாயபகவான்தானோ
நீதமுடன் தேடுவதில் லாபமென்ன
நீதியுள்ள புண்ணியத்தால் நேர்ந்தால்நேரும்
தோதமுடன் பாண்டியனும்
விசனங்கொண்டு துப்புரவாய் மதிகுலைந்து மயங்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
2918. மயங்கியே பாண்டியனு
மாசீர்மத்தில் மார்க்கமுடன் விசனமதாய் வீற்றிருந்தான்
தியங்கியே நடராஜர்
தம்மைதானும் தில்லையெனும் பதிதனக்கு சுவாமியாக்கி
தயங்கவே தாரணியிலுள்ள மாந்தர்
சட்டமுடன் தான்தொழுது வணங்கிநிற்க ப
யங்கரமா யெந்நாளும்
நாதர்தம்மை பாலித்தார் தேவஸ்தானமாமே
விளக்கவுரை :
2919. தானமாம் பாண்டியனை
இந்தக்கோலம் தகையுடன் செய்துவைத்தான் சிற்பன்தானும்
காண்மையுடன் செய்ததனால்
பாவமில்லை கடந்ததொரு சித்தர்களை மோசம்பண்ணி
ஈனமுடன் சாத்திரத்தைப்
பிரட்டல்செய்து யேளிதங்களாகவல்லோ பாடிப்போட்டார்
ஊனம்வரச் செய்ததினால்
இந்தப்பாபம் வுத்தமர்க்கு நேர்ந்ததென நினைத்திட்டேனே
விளக்கவுரை :
2920. நினைக்கையிலே சிற்பனுக்கு
வுப்பாயதண்டம் நேர்ந்ததுவும் பார்த்திருந்தேன் சுவாமிபக்கல்
பனைப்புடனே கருவூரார்
கேள்விசொல்ல பயந்துமே யடியேனும் நடுநடுங்கி
வினைப்பயனால் நேர்ந்ததற்கு
என்னசெய்வோம் விதிவசத்தை தப்புதற்கு யாராலாகும்
தினைப்புடனே யிச்சங்கை
சொல்லப்போனால் தேசத்தில் பொய்யென்பார் மெய்யெந்நாரே
விளக்கவுரை :