2966. சொற்பமாய் எமதர்மராஜன்தானும்
தொல்லுலகில் ஒருவரையும் விட்டதில்லை
அற்பமாம் ஆக்கினைகள்
செய்ததுண்டு அவனியிலே யாருந்தான் மீண்டதில்லை
கற்பழிந்த
மாதருக்குமிந்தநீதி கர்த்தனது வைகுண்டபதியில்தானும்
முற்பவத்தில் செய்தவினை பாவத்தாலே
மூளுமே வைகுண்ட நீதிதானே
விளக்கவுரை :
2967. காணவென்றால் பரபஞ்ச
மாய்கையப்பா கண்டவர்கள் விண்டவர்கள் ஆருமில்லை
வேணபடி சாத்திரத்தை
மிகவறிந்து வேகமுடன் காலாங்கி பாதம்போற்றி
நாணவே சித்தர்முனி தானடுங்க
நாதாந்த குளிகையது பூண்டுகொண்டு
கோணவே சொர்க்கபதி யானுஞ்சென்று
தோற்றமுடன் கண்சிவந்தேன் போகர்தாமே
விளக்கவுரை :
[ads-post]
2968. தாமான வையகத்தில்
மாண்டமாண்பர் தாரிணியில் வைகுண்டபதியில்தானும்
கோமானாம் அரசர்குதல்
குருக்கள் தாமும் கோலமுடன் ராஜாதிராஜர்தாமும்
பூமானாம்
சீமான்களெவரையுந்தான் பொன்னுலகப்பதிதனிலே காணலாகும்
நாமான சடலமது மண்ணேயாகும்
நாதாந்தக் காற்றதுதான் அழியாதென்றே
விளக்கவுரை :
2969. அழியாது மாண்டவர்கள்
எல்லாருந்தான் அப்பனுட பதிதனிலே காணலாகும்
அழியாது வாதமந்தான்
எந்தநாளும் அமரரது பதிதனிலே காணலாகும்
அழியாது மாண்டவர்கள்
ஒருகாலந்தான் அப்பனே ஒருகாலம் எழுந்திருப்பார்
அழியாது ஒருகாலு மவர்தமக்கு
அப்பனே நீதியுண்டு கேள்வியுண்டே
விளக்கவுரை :
2970. கேள்விக்கு
உத்தாரஞ்சொல்லவேண்டும் சொல்லாவிட்டால் நீதியுடனாக்கினையுண்டு
தாழ்மையுடன் எமதர்மராஜனுக்கு
சாங்கமுடன் நீதிமொழி யுரைக்கவேண்டும்
ஏழ்மையுடன் போலிருந்து
நீதிபேசி நீதியுடன் அவர்பாதம் பணியவேண்டும்
வாழ்மையுடன் உன்மீதில்
கிருபைவைப்பார் வாழலாம் சொர்க்கபதி வாழலாமே
விளக்கவுரை :