போகர் சப்தகாண்டம் 2836 - 2840 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2836 - 2840 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2836. மாலையுடன் சுவாசகாசங்கள் போகும் மன்னவனே விப்புருதி திகட்டிப்போகும்
வாலையது வயததுவும் அதிகமெத்த வாகுடனே நரைதிரையு மற்றப்போகும்
காலையிலே மருந்துண்ணுங் காலந்தன்னில் காலார நடந்துவர மெத்தநன்று
வெளியிலுமெப்போதுஞ் சோம்பலாக வீணிலே காலமது கழிக்கநன்றே 

விளக்கவுரை :


2837. நன்றாக சோம்பலது நீக்கியல்லோ நாயகனே கஷ்டமென்ற வேதைபாரு
தன்றான மேனியது பிணிநாடாது சதாகாலந் திமிரேனுங்கிட்டாதப்பா
பன்றான மருந்ததுவும் வீறுகாணும் பரிதிபோல் தேகமது கற்றூணாகும்
நின்றாடும் அரவமது தீண்டிட்டாலும் நேரான விஷமதுவும் ஏராதன்றே

விளக்கவுரை :

[ads-post]

2838. ஏராது விஷிமதுவும் மேல்நோக்காது என்மகனே எந்நாளுஙஃ கற்பமான
கூரான தேகமது போலேதோற்றும் குறையாது வாசியது யடங்கியோடும்    
பேரான நாதாக்கள் முனிவர்பாகம் பேருலகில் கிட்டாது புண்ணியோர்க்கு
நேரான செந்தூரம் சொல்லொணாது நேர்மையுடன் பாடிவைத்தேன் போகர்தாமே

விளக்கவுரை :


2839. தாமான வின்னமொரு மார்க்கம்பாரு தயவான சிறுபாலா சாற்றக்கேளும் 
குமரன்கள் உண்பதற்கு உண்டைசொல்வேன் கொற்றவனே கருஞ்சீரம் நற்சீரந்தான்
வேமான முட்டியது சிற்றாமஉட்டி விரைவான பேராவின் முட்டிதானும்
நாமான திரிமஞ்சள்தானுமாகும் நாட்டிலுள்ள வேலியது ரண்டதாமே

விளக்கவுரை :


2840. ரண்டாமூலமது சிவப்புமூலம் நெடிதான கறுப்பான மூலந்தானும்
கண்டான கத்திரியும் ரண்டதாகும் கருவான மஞ்சளென்ற கத்திரிதானும்
துண்டான வெண்கத்திரி தானுமப்பா துரையான கருவேலன் வெள்வேலன்தான்
உண்டான யத்தியது ரண்டதாகும் வாகுடனே பேயத்தி நல்லத்தியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar