2876. செய்யவே தபசுகட்டு
வின்னஞ்செய்தோர் செயலான பாக்கியத்தை கொள்ளைகொண்டோர்
மெய்யுடனே பருஷனுக்கு
வுண்மைபேசி மேதினியில் சோரத்துவம் செய்தபேரும்
கைதவமாய் ஞானிகட்கு
இடர்செய்தோரும் காசினியில் நற்பெண்டீர் கெடுத்தபேரும்
வெயில்தனிலே மாடுகட்குச்
சலஞ்காட்டாமல் வெட்டவெளி தன்னிலே விட்டோர்தாமே
விளக்கவுரை :
2877. விட்டபெரியோர்களைத்
தானகமேபேசி வேதாந்தத் துண்மையெனும் நாதர்தம்மை
கொட்டுமே பறடுகடித்து
யிடங்கொடாமல் தோறாமல் சதாகாலந் துன்பஞ்செய்தோர்
நட்டமுடன் யகதிபரதேசி தம்மை
நாடோறு மையமிடாதிட்டபேரும்
வட்டமுடன் குழந்தைகட்கு
பால்கொடாமல் வாகுடனே வதைசெய்தோர் பாவியாமே
விளக்கவுரை :
[ads-post]
2878. புண்ணியனாம்
நியாயம்செய்தபேரை பேரின்ப வீடதனைஜோடித்தோர்கள்
துண்ணமுடன் வைகுண்டப்
பதியிலெல்லாம் திசைகெட்டு ஞறிபட்டு கிடக்கும்வண்ணம்
நண்ணமுடன் இதுகளெல்லாம்
கண்டேன்யானும் நளினமுடன் வக்கினியின் சுவாலைகண்டேன்
தண்ணமுடன் வட்டையென்ற
குழியுங்கண்டேன் தாக்கான வரணையென்ற குழிகண்டேனே
விளக்கவுரை :
2879. கண்டேனே முதலையுட சுனையுங்கண்டேன் கானாறு வோடைகளில் யானைகண்டேன்
தண்டமுள்ள காடுகள்போ
லனந்தம்கண்டேன் தன்மையுள்ள தீநரகிற் தள்ளக்கண்டேன்
கொண்டல் வண்ணன் அச்சுதனை
அங்கேகண்டேன் கோடான கோடிமனுராசர் கண்டேன்
தொண்டமுடன் ரிஷிக்கூட்டம்
கோடிசேனை கொற்றவனைச் சூழ்ந்திருக்கப் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
2880. பார்த்தேனே எமபுரத்து சாங்கமெல்லாம்
பாழ்நரகு படுகுழியாவுங்கண்டேன்
தீர்த்தமுடன் லிங்கமது
தெரிசித்தேன்யான் சிறமுடனே கோடிமுனி தபசிகண்டேன்
சேர்த்துமே
வைகுண்டபதியைக்கண்டேன் சேனைதிரள் கூட்டமதை சேனைகண்டேன்
பார்த்துமே வந்தான்யான்
பரலோகத்தை பராபரியாள் கிருபைதன்னால் பார்த்திட்டேனே
விளக்கவுரை :