போகர் சப்தகாண்டம் 2831 - 2835 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2831 - 2835 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2831. குப்பியென்றால் காசியென்ற குப்பிதானும் குணமான சீலையது வலுவாய்ச்செய்து
தப்பிதங்கள் வாராமல் மாக்கல்கொண்டு தளராமல் வாய்மூடிச்சீலைசெய்து
ஒப்பமுடன் தளவாயாஞ் சட்டிதன்னில் உத்தமனே பொடிமணலே பாதியிட்டு
நெப்பமுடன் குப்பிநடுமையந்தன்னில் நேர்மையுடன் மேலுமந்த மணலைமூடே

விளக்கவுரை :


2832. மூடவே மேல்சட்டிகொண்டுமூடு முறையோடு நாதாக்கள் சொல்லைப்போலே
வாடவே திரியாதே மயங்கவேண்டாம் வாகுடனே வாலுகையா மேந்திரத்தில்
நீடவே எணசாம மெரித்தபோது நீதியுள்ள பாலகனே நிஜமாய்க்கேளு
சாடவே செந்தூர மென்னசொல்வேன் தளுக்கற்ற சந்திரன்போல் தளும்புந்தானே

விளக்கவுரை :

[ads-post]

2833. தானான செந்தூரம் அருணன்போலாம் தாக்கான பிரகாசமான ஜோதி  
வேனான கொங்கணவர் செய்தபாகம் மேதினியில் ஆருந்தான் செய்யவில்லை
கோனான எனதையர் காலாங்கிநாதர்குரு சொன்னபடி செய்தேன்யானும்
தேனான செந்தூரப் போக்குதன்னை தேசத்தார் சீனத்தார்க்கு உரைத்திட்டேனே

விளக்கவுரை :


2834. உரைத்திட்டேன் சீனபதிதேசத்தார்க்கு உகைமையுடன் செய்துவைத்தேன் இந்தபாகம்
வரைந்திட்ட செந்தூரப் போக்குதன்னை வளமுடனே மண்டலந்தான் கொண்டபோது
குரைத்திட்டார் கோரியது மேனிதானும் குறையாமல் குன்றியது போலேகாணும்
பரைத்திட்ட வடிவுமது சிவப்புகாணும் பளபளப்பு வெந்நாளும் அதிதந்தானே

விளக்கவுரை :


2835. அதிகமா மின்னமொரு பாகங்கேளு வப்பனே யான்கண்டவரைக்குஞ் சொல்வேன்
துதிதமுடன் செந்தூரமுண்டபோது முறையான மேகமென்ற திருபதும்போம்
கதிதமுள்ள யாறுவகை நீரும்போகும் கபத்துடனே ஈளைமுதல் காணாதோடும்
பதிதமுள்ள லிங்கத்தின்புத்து போகும் வாங்கான கண்டத்தின் மாலைபோமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar