போகர் சப்தகாண்டம் 2676 - 2680 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2676 - 2680 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2676. சித்தனாய்ப் பிறப்பதுவும் அரிதேயாகும் சீருலகில் விட்டகுறை காணவேண்டும்
பக்தியுடன் சிவசத்தி ஞானம்வேண்டும் பாருலகில் பெரியோர்கள் கிருபைவேண்டும்
வெத்தியுடன் சின்மயத்தில் சொரூபம் வேண்டும் வேதாந்தத் தாயினது வருளேவேண்டும்
நித்திலங்கும் பதாம்புயத்தின் சூட்சங்காண நிலையான வாசிவழி யறிவாய்தானே

விளக்கவுரை :


2677. தானான கெந்தகத்தின் மாற்றங்கேளு தயவான கெந்தகமும் களஞ்சியொன்று
வேனான தங்கமது களஞ்சியொன்று எழிலான வேலனிட பிசினிதன்னால்
பானான கெந்தகத்தின் மேலேயப்பா பாகமுடன் சுத்தியல்லோ வங்கிபூட்டி
தேனான தேனதுவுந் தானெடுத்து தெளிவுடனே காரமதை பொரித்துப்போடே

விளக்கவுரை :

[ads-post]

2678. போட்டுமே சாம்பிராணி பூரந்தானும் பொங்கமுடன் களஞ்சியது செப்பக்கேளு
தாட்டிகமாய் தேனதிலே யரைத்து மைந்தா சாங்கமுடன் கெந்தஇக்கு வங்கிபூட்டி
நோட்டமுடன் சுடராவி தீபந்தன்னில் நோக்கமுடன் தான்கொளுத்தி யெடுத்துப்பாரு
வாட்டமுடன் கெந்தியது தங்கஞ்சேர்த்து வாகுடனே களங்கமது போலாம்பாரே

விளக்கவுரை :


2679. பாரேதான் களங்கமது வுருக்கிப்பாரு பாகமுடன் பிரிதீவின் களங்குமாகும் 
சீரேதான் களங்கெடுத்து மன்னாகேளு சிறப்பான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று
நேரேதான் தானுருக்கிக் கொடுத்துப்பாரு நேரான மாற்றதுவும் ஆறுகாணும்
வேரேதான் கரியோட்டி லூதிப்போடு வெளுமையாம் பசும்பொன்போல் தோற்றுந்தானே

விளக்கவுரை :


2680. தோற்றவே யின்னுமந்த பொன்னைத்தானும் தோராமல் வாரடித்துப் புடத்தைப்போடு
மாற்றலென்ற திறைசவுடு களிப்புமேகி மன்னவனே பொன்னதுவும் பசுமைகாட்டும்
நாற்றமென்ற செம்பதுவும் கொஞ்சம்நிற்கும் நாயகனே புடத்துக்கு ஏகாதப்பா
கூற்றனென்னும் வங்கமது கொடுத்துவூத கொற்றவனே சவளையது பசும்பொன்னாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar