2461. கொட்டியே குருசொன்ன
வளவாய்க்கூட்டி குணமாகச் சக்கரமாம்பானைதன்னில்
திட்டமுடன் வாலைவைத்து
சீலைசெய்து சிறப்புடனே இருபக்கம் புனலும்வைத்து
சட்டமுடன் அடுப்பேற்றி
யெரிப்பாயானால் சார்புடனே திராவகமும் இறங்கும்பாரு
நட்டமில்லா திராவகமும்
எடுத்துப்பாரு நாதாக்கள் செய்யார்கள் அதீதந்தானே
விளக்கவுரை :
2462. அதீதமென்ற வித்தையிது வாலைவித்தை
அவனியிலே செய்யுவது வரிமைகாணும்
கதீதமென்ற திராவகத்தை
பதனம்பண்ணு கருவான சூதத்துக்கு உறுதிகாலன்
நதீதமென்ற கண்டருட
திராவகத்தால் நாட்டிலே வெகுகோடி செய்வாரப்பா
பதீதமென்ற திராவகங்கள்
இன்னசொல்வேன் பாகமுடன் போகரிஷி பயின்றவாறே
விளக்கவுரை :
[ads-post]
2463. பயின்றதொரு வின்னமொரு
மார்க்கம்பாரு பாங்கான சாரமது சேர்தானொன்று
நவின்றதொரு பூநீறு
சேர்தான்பாதி நலமான சீனமது சேர்தானொன்று
துயின்றதொரு கல்லுப்பு
சேர்தான்கால்தான் சுயமான வெண்காரம் சேர்தானொன்று
அயின்றதொரு சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி அப்பனே கலசமென்ற பானைக்கேற்றே
விளக்கவுரை :
2464. ஏற்றவே சக்கரமாம் வாலைவைத்து
எழிலாகச் சீலையது வலுவாய்ச்செய்து
காற்றதுதான் போகாமல்
அடுப்பிலேற்றி கரகமென்ற பானைக்கு குழலும்வைத்து
போற்றமுடன் புனல்வழியே
ஜலமும்போக பொங்கமுடன் தானெரிப்பாய் சாமநேரம்
கூற்றனைப்போல் திராவகமும்
இறங்கும்பாரு கொடிதான வேதையிது சொல்லொணாதே
விளக்கவுரை :
2465. சொல்லவே நாவேது பாவுமேது
சொற்பரிய திராவகமும் காரமெத்த
வெல்லவே சரக்குக்கு
மித்திரகாலன் வெகுகொடியன் வெகுநெடியன் சாரனப்பா
புல்லவே திராவகத்தை
பதனம்பண்ணு பொங்கமுடன் சீஷாவில் விட்டுமைந்தா
மெல்லவே மேற்கல்லு
கொண்டுமூடி மிக்கான திராவகத்தை வுறுதிபண்ணே
விளக்கவுரை :