2436. பூவான சவர்க்கார
மிந்துப்போடு புகழான நவாச்சாரம் கடுக்காய்தானும்
நாவான பெருங்காயம்
வெண்காரந்தான் நலமான வாளுவை சீரந்தானும்
பாவான ஓமமுடன் கடுகுரோனி
பாங்கான வரப்பொடியுங் கருப்புகட்டி
மாவான சாதிக்காய்
கிராம்புதானும் மகத்தான கடுக்காய் தான்றிக்காயே
விளக்கவுரை :
2437. காயான நெல்லிக்காய்
சுக்குதானும் கருவான மிளகுடனே கோஷ்டந்தானும்
தாயான யேலமுடன் வளையலுப்பு
தாக்கான வெடியுப்பு யெவச்சாரந்தான்
மாயான இந்துப்பு கல்லுப்போடு
மகத்தான சவர்க்காரம் பலமதாகும்
தூயான இதுவெல்லாம்
சமனாய்கூட்டி துப்புறவாய் சீனியது சரியாய்க்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
2438. கூட்டியே வாலுகையில்
அடுப்பிலேற்றி குமுறவே சேறுபோலாகக் காய்ச்சி
நாட்டமுடன் கலபதில்
பதனம்பண்ணு நலமுடனே அந்திசந்தி கொண்டாயானால்
வாட்டமுடன் கவுசையொடு
குன்மம்மாண்டு வாகான தொண்டைமுதல் மலட்டுப்பூச்சி
காட்டகத்தே போகுமென்று
போகர்தானும் கருத்துடனே பாடிவைத்தகிரந்தந்தானே
விளக்கவுரை :
2439. தானான கிரந்தமது
பட்சந்தானும் தயவுடனே கொண்டவர்க்கு கெற்பமுண்டாம்
கோனான விஷபாண்டு சோகைபோகும்
குடிகெடுக்கும் கெற்பமென்ற ரோகந்தீரும்
மானான கைகுடைச்சல்
வாயுபோகும் மகத்தான சூலைமுதல் ரோகம்போகும்
தேனான விப்புருதி மாலைதீரும்
தெளிவான கைமுடக்கு போகுங்காணே
விளக்கவுரை :
2440. காணவென்றால் யிடுப்புவலி
சந்துவாதங் கள்வாதம் குடல்வாதம் காணாதோடும்
நாணவே வயிற்றுவலி விம்மல்போகும்
நரம்பெல்லாம் பிகுத்திருத்தல் நளினமாகும்
ஈணவே பிறவீச்சு
பித்தம்போகும் எழிலான வாதமென்ற தெண்பதும்போம்
சீணவே யிருளைவி
பெருமூச்சேரும் சிறப்பான பத்தியந்தானில்லையாமே
விளக்கவுரை :