போகர் சப்தகாண்டம் 2361 - 2365 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2361 - 2365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2361. ஆறான மாற்றதுவும் சொல்லப்போமோ அப்பனே சித்தருட மகிமைகோடி
கூரான பொன்தனையே செய்யுமார்க்கம் குருக்குவழி நெடுக்குவழி கோடிக்கோடும்
பேரான சாபத்தால் சபிப்பார்சித்தர் பேருலகில் வாதமது புகலப்போமோ
நேரான கல்லானைச் சுக்கான்கல்லாம் நேர்மையுடன் தானுரைப்போம் நுணுக்கந்தானே

விளக்கவுரை :


2362. தானான சீனபதி சுக்கானப்பா தகைமையுள்ள சேரதுதான் பத்ததாகும்   
கோனான கொங்கணவர் வைத்தபாகம் கூறுவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
வேனான சுக்கானும் பூநீரோடே வேகமுடன் வேகவைத்து தெளிவிருத்து  
பானான காரமது கூடச்சேர்த்து பளிங்குபெற மண்சட்டி காய்ச்சிடாயே

விளக்கவுரை :

[ads-post]

2363. காய்ச்சியே மூதிரை யுருக்கிக்கொண்டு கருவாகக் கருவதனில் மெழுகுகட்டி
பாய்ச்சலுடன் பலவகைக்குக் காரமிட்டுப் பாங்குடனே வுருக்கையிலே கண்விட்டாடும்
தேய்ச்சலுடன் பலகைபோல் கருதான்கட்டி செம்மியே வுருக்கினமாய் வார்ப்பாயானால்
மாச்சலென்ற படிகம்போல் பாயும்பாரு மகத்தான கண்ணடியாகுந்தானே

விளக்கவுரை :


2364. கண்ணடி பிறக்கும்வகை யின்னஞ்சொல்வோம் கருத்துள்ள மாந்தர்களே கழறக்கேளும்
சுண்ணமென்ற பூநீரால் விளையுமார்க்கம் சூட்சாதி சூட்சமப்பா சொல்லப்போமோ
வண்ணமுள்ள கண்ணாடி வர்ணம்சொல்வோம் மயங்காதே யிரும்பினுட மண்தானப்பா
திண்ணமுடன் பூநீரில் சேர்த்துருக்க புகழான கண்ணடி வர்ணமாச்சே

விளக்கவுரை :


2365. வர்ணமுடன் கண்ணடி யனந்தமார்க்கம் வாகுடனே செய்யலாம் கோடிவித்தை
வர்ணமுள்ள பாத்திரங்கள் இதனாலாகும் வளமான புட்டிமுதல் குப்பிமார்க்கம்
வர்ணமுள்ள வுளக்கொளிவு இதனாலாகும் வாகான பீங்கான்கள் இதனாலாகும்
வர்ணமுள்ள மணிவகைகள் இதனாலாகும் மார்க்கமுள்ள திவாபரண மிதனால்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar