போகர் சப்தகாண்டம் 2401 - 2405 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2401 - 2405 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2401. தானான கிராதாயினுகத்திலப்பா சதகோடிசூரியருங் கண்டதில்லை
வேனான ராவணனார் கோட்டைக்குள்ளே வெளிகாணாகோட்டையது ஏழுசுத்து
கோனான என்னையர் காலாங்கிநாயர் குளிகையிட்டு கோட்டைக்குள் சென்றாரங்கே
பானான கிரேதாயினுகத்துசித்தர் பண்புடனே இருந்தாராம் கோடிபேரே

விளக்கவுரை :


2402. பேரான சித்தர்முனி ரிஷிகள்கோடி பேருலகில் இருந்தாராம் அனேகம்பேர்கள்
சீரான கோட்டைக்குள் சமாதிகண்டேன் சிறப்பான சமாதிமுன் ராட்சசக்கூட்டம்
பாறான கிங்கிலியர் ஆயிரம்பேர் படைபொருத வென்மேலே வந்தபோது
நேரான காலாங்கிநாயர்தாமும் நெறிமுறைமை வழுவாது நெறிசொன்னாரே

விளக்கவுரை :

[ads-post]

2403. சொன்னதொரு காலாங்கிநாதருக்கு சொரூபமென்ற சித்தரெல்லாம் ஒன்றாய்கூடி
நன்னயமாயி ராவணனார் கோட்டைக்குள்ளே நலம்பெறவே வதிசயங்கள் யாவுஞ்சொன்னார்
பன்னயமாய் சமாதியிடஞ் சென்றபோது பார்த்தார்கள் கோடிமுனி ரிஷிகள்தேவர்
மன்னவனார் கோட்டைக்குள் வந்ததற்கு வாகுடனே தண்டனைகள் மிகுதியாச்சே

விளக்கவுரை :


2404. ஆச்சுதாம் காலாங்கிநாதருக்கு அப்போதே சாபமது நேர்ந்துதங்கே
மாச்சலுடன் காலாங்கிநாதர்தாமும் மகத்தான சொரூபமென்ற குருவையெண்ணி
நேச்சலுடன் சாபமதை நிவர்த்திசெய்ய நேர்மையுடன் தன்மனதில் நினைத்தபோது
கூச்சலென்ற சாபமது நிவர்த்தியாச்சு கொற்றவனே திரேதாயினுகத்தில்தானே

விளக்கவுரை :


2405. தானான யுகத்திலப்பா காலாங்கிநாதர் தகைமையுடன் சாபமதை தீர்த்துக்கொண்டார்
கோனான என்னையர்காலாங்கிநாதர்குவலயத்தில் கோடியுகம் குளிகைபூண்டார்
தேனான ரிஷிகளிட சாபத்தாலுந் தேறினார் ராவணனார்கோட்டைக்குள்ளே 
மானான சமாதியிடம் கிட்டிப்போனார் மகத்தான தேவமுனி கண்டிட்டாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar