271. பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி
யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.
விளக்கவுரை :
272. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே.
விளக்கவுரை :
[ads-post]
273. ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.
விளக்கவுரை :
274. என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன் புருக்கிப் பெருந்தகை
நந்தியும்
தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே.
விளக்கவுரை :
275. தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை
யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.
விளக்கவுரை :