2996. தருணமுடன் சித்தாதி
சித்தரெல்லாம் வளமையுடன் அவர்தமக்கு வணக்கம்சொல்வார்
கருணையுடன் அவர்பாதம்
தொழுதுநிற்பார் காவலுடன் சித்தர்களும் சமாதிபக்கம்
தருணமது சமாதிக்கு முன்னதாக
தாழ்மையுடன் காத்திருந்த சித்துதாமே
விளக்கவுரை :
2997. சித்தான காலாங்கி கிருபையாலே
சென்றேனே குளிகையது பூண்டுகொண்டு
சத்தான லோகமெல்லாஞ்
சுத்திவந்தேன் சாங்கமுடன் காணாத காட்சியெல்லாம்
முத்தான காண்டமது
மூன்றுக்குள்ளே முடிவுபெற பாடிவைத்தேன் லோகமார்க்கம்
நித்தமுமே காலாங்கி
யாமுந்தானும் நிதந்தோறும் பூசையிலே நினைக்கின்றேனே
விளக்கவுரை :
[ads-post]
2998. நினைக்கையிலே காரியங்கள்
எல்லாஞ்சித்தி நீணிலத்தில் அவர்போலுஞ் சித்துமுண்டோ
வனைதோறும் காலாங்கி
நூலைப்பார்த்து மார்க்கமுடன் வர்ச்சித்தே பூசிப்பார்கள்
சினத்தவரு முதலாவார்
காலாங்கிதம்மால் சீருலகில் கீர்த்தியுடன் வாழலாகும்
வினைப்பயனும் விட்டுமல்லோ
புண்ணியனாவாய் வேதாந்தத் தாயினது வருளுமுண்டே
விளக்கவுரை :
2999. அருளான செல்வமுண்டு
கியானமுண்டு அப்பனே குருசம்பிரதாயமுண்டு
பொருளுண்டு புகழுண்டு
போகமுண்டு பொன்னுலகப்பதி தனிலேயிடமுமுண்டு
இருளகன்று சூரியன்போல்
விலாசமுண்டு எழிலான அஷ்டவிதபாக்கியமுண்டு
மருளகன்று வைகுண்டபதி
என்னாளும் வாழ்வுண்டாய் வாழ்த்துமல்லோ இருப்பார்முற்றே
விளக்கவுரை :