2451. உண்மையா மின்னமொரு
மார்க்கம்பாரு உத்தமனே நாதாக்கள்சொன்னதில்லை
வண்மையுடன் தயிலமது
சாற்றக்கேளு வாகான எண்ணெயது சேர்தானப்பா
திண்ணமுடன் கையான்சார்
சேர்தானப்பா தினமான முடக்கொத்தான் சேர்தான்பாதி
கண்ணமுடன் கருந்துளசி
சேர்தானப்பா தலமான நெல்லிசார் சேர்தான்கூட்டே
விளக்கவுரை :
2452. கூட்டவே
தழுதாழைச்சார்தான்நாழி குணமான வழுதலையின் சார்தான்நாழி
நீட்டமுடன்
பசளைச்சார்தான்நாழி நெடிதான குமரிச்சார் சார்தான் நாழி
தேட்டமென்ற நீர்பூண்டு
சார்தான்நாழி தெளிவான கரந்தைச்சார் சார்தானாழி
வாட்டமுடன் பசுவின்பால்
நாழியாகும் வளமான கடைசரக்கு சாற்றக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
2453. கேளேதான் கற்பவகை
சாற்றக்கேளும் கெடியான வாலுழுவையரிசிதானும்
தாளமுடன் நன்னாரி
முத்தக்காசு தாக்கான சீரகமும் ஓமந்தானும்
நீளமுடன் கார்போக
மேலந்தானும் நிலையான கோஷ்டமுடன் மதுரந்தானும்
பாளமுடன் வகிற்கட்டை
செம்பூரானும் பாங்கான சந்தனமுடன் தேவனாமே
விளக்கவுரை :
2454. தேவனாம் பட்டையுடன்
கருஞ்சீரந்தான் தேற்றானுமெட்டியுடன் சித்தரத்தை
காவமென்ற வால்மிளகு
சாதிக்காயும் கருவான பூப்பனையும் தண்ணீர்மிட்டான்
சாபமென்ற கரிமஞ்சள் சார்பான
வெள்ளையென்ற மிளகுகூட்டி
தூபமென்ற சாம்பிராணி சமனதாக
தப்புரவாய் முக்கண்ணின் பாலாலாட்டே
விளக்கவுரை :
2455. ஆட்டியே
மெழுகுபதந்தன்னிற்காச்சி அப்பனே தான்வடித்து பதனம்பண்ணு
தாட்டிகமாய் சீசாவில்
அடைத்துமைந்தா தகைமையுடன் ஒருதிங்களானபின்பு
நாட்டமுடன் தயிலமதை
பிரயோகித்தால் நாடாது கெற்பத்தின் சூலைபோகும்
ஓட்டமுடன் கெற்பத்தின்
வாயுபோகும் ஓகோபொய்யாது உண்மையாமே
விளக்கவுரை :