போகர் சப்தகாண்டம் 2446 - 2450 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2446 - 2450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2446. கூட்டையிலே சர்க்கரையும் ஒன்றாய்ச்சேர்த்து குணமாகத் தான்கிளறி பதனம்பண்ணு
நாட்டமுடன் லேகியத்தை மண்டலந்தான் நலமுடனே கொண்டுவர பலனக்கேளு
தீட்டமென்ற நாளையிலே வயிர்நோய்போகும் திறமான கால்வீக்க மகோதரம்போம்
வாட்டமுடன் சூதத்தின் திரட்சிபோகும் வாகானகட்டிமுதல் சூலைபோமே

விளக்கவுரை :


2447. சூலையுடன் வாயுவென்ற தெண்பதும்போம் சூக்குமத்தின் நீரேற்றமகன்றுபோகும்
காலையிலே வாயூரல் அற்றுப்போகும் கதிப்புடனே கொதிப்புமுதல் கொதிப்புமுதல் காணாதோடும்
மாலையிலே தான்காணும் மண்டைக்குத்து மயக்கமுடன் தலையிடியும் மாறிக்காணும்
ஆலையிலே யகப்பட்ட கரும்புபோல அகன்றுமே போகுமடா பிணிகள்தாமே

விளக்கவுரை :

[ads-post]

2448. பிணியான ருதுகால வியாதிரோகம் பேரான கெற்பத்தின் ரோகம்போகும்
அணியான ருத்தரமாங்குடன்தான்மூட்டி அப்பனே வாயுவென்ற கட்டிதானும்
நணியான மகோதரமும் அணுகாதப்பா நாடாது குடல்வலியும் போகும்பாரு
கணியான சோரியது கட்டிப்போகும் காறான கெற்பநோய் போகுந்தானே

விளக்கவுரை :


2449. தானேகேள் சூதகத்தின் வாயுதீரும் தாக்கான கசரோக மெல்லாம்போகும்
வேனேதான் திமிர்வாதம் குடலில்வாதம் மிக்கான பட்சமென்ற வாதம்போகும்
கோணேதான் கெண்டையென்ற வாதம்போகும் கொடிதான இடுப்புவலி போகும்பாரு
மானேதான் முழங்காலில் வாதம்போகும் மகத்தான பாதமது வீக்கம்போமே

விளக்கவுரை :


2450. வீக்கமது யேகுமது என்னசொல்வேன் மிக்கான தேகமது இளப்புமெத்த
தூக்கமது மதிகமுடன் சன்னலாகும் துடியான நரம்புமுதல் துடிப்புமெத்த
தாக்கமுடன் சூடதுதான் தலைமேற்கொண்டு சதாகாலம் தலைவலியும் மிகுதிகாட்டும்
ஊக்கமுடன் தயிலமது சொல்வோம்பாரு வுத்தமனே போகரிஷி உண்மைகாணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar