போகர் சப்தகாண்டம் 2431 - 2435 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2431 - 2435 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2431. உலகான சீனபதிமாந்தரப்பா வுலகுமுதல் கருக்களெல்லாங் கொண்டாரங்கே  
நிலவுபோல் சொல்லிவிட்டேன் மாந்தர்கப்பா நிட்சயங்களெல்லாந்தான் கண்டுகொண்டார்
கல்வியுடன் நானுமல்லோ வுறவுகொண்டு காணாதகாட்சியெல்லாம் அங்கேகண்டேன்
தலமதிகமான தொருசீனதேசம் தாரணியிலெவராலும் சொல்லப்போமோ

விளக்கவுரை :


2432. போகாது வாதிசேடனிலுமாகப் பொங்கமுடன் சித்தரிலுமாகாதப்பா
வேகாத பிணம்போலே வுழல்வாரப்பா விருதாவாய் நூல்சொல்லி மறைத்தாரங்கே
சாகாத கற்பமது வுறுதிசொன்னார் சாங்கமுடன் கற்பத்துக் குயிர்தானில்லை
ஆகாத சாஸ்திரங்க ளனைத்துஞ்சொல்லி அப்பனே சாபமது சொன்னார்காணே

விளக்கவுரை :

[ads-post]

2433. காணவே சாபமது சொன்னாரங்கே கருவாக யெனைப்போலச் சொன்னாரில்லை
தோணவே தோணாத பொருள்களெல்லாம் முரையுடனே சொன்னேன்யானே
மாணவே யெந்நூலை பார்த்தபேர்க்கு மறைப்புமுதல் திறைப்புமுதல் யாவுமில்லை
நாணவே சாத்திரங்கள் முறைதப்பாமல் நலமுடனே பாடிவைத்தேன் நன்மைபாரே

விளக்கவுரை :


2434. பாரேதா னின்னமொரு கருமானங்கேள் பாடுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நேரேதான் வரிக்குமட்டி சார்தான்நாழி நேரான கள்ளிச்சாறுநாழி
வாரேதான் மாறுலிங்குச்சாறுநாழி வாகான விழுத்தியுட சாறுகூட்டே

விளக்கவுரை :


2435. கூட்டியே பழச்சாறு நாழிதானும் குணமான பசுநெய்யும்நாழிகூட்டு
நாட்டமுடன் இதுவெல்லாமொன்றாய்கூட்டி வளமையுடன் தான்சேர்த்து மருந்துகேளு
நீட்டமுடன் திப்பிலியும் சுக்குதானும் நெடிதான் வெள்ளுள்ளி யிலுப்பைபூவே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar