போகர் சப்தகாண்டம் 2411 - 2415 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 2411 - 2415 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

2411. தாமான காலாங்கிநாதர்சாமி தன்மையுடன் அவர்களிடம் பேசாமற்றான்
நேமமுடன் காலாங்கி நாதர்தாமும் நெறியுடனே யங்கிருந்து மறுபக்கந்தான்
போமெனவே தன்மனதிலடக்கிசாமி பொலிவுடனே கீழ்புரமாம் திரும்பும்போது
தேமமுடன் கோட்டைக்குள் ரிஷிகள்கோடி தெளிமையுடன் கண்டாராம் கோடிபேரே

விளக்கவுரை :


2412. கோடியாம் ரிஷிமுனிவர் கோடாகோடி கோமகனார் கோட்டைக்குள் வாசற்பக்கம்
நீடியே சமாதியிடம் நின்றிட்டாராம் நித்திலங்குப் பூமகனார் சமாதிபக்கம் 
தேடியே பார்க்குகையில் சமாதிமுன்னே திகழான சித்தொருவர் அங்கிருந்தார்
நாடியே யவரிடத்திற் கண்டுபேசி நயமுடனே ராவணன் சேதிகேட்டிட்டாரே 

விளக்கவுரை :

[ads-post]

2413. கேட்கையிலே துவாபரயுகத்திலப்பா கெடியான என்பாட்டன் ராவணற்கு
சூட்சமுடன் ரிஷிசாபம் நேர்ந்ததென்று சூட்சமுடன் எந்தனுக்கு சித்துசொன்னார்
வேட்கமுடன் ரிஷியினிட சாபத்தாலே வேகமுடன் கோட்டையது வழியவென்றும்
நீட்கமல சூர்ப்பனகி பங்கமாகி நீடாகி கோட்டையது யிடியென்றாரே

விளக்கவுரை :


2414. இடியென்ற சாபத்தால் இலங்கைதானும் எழிலான பதிகள்முதல் எல்லாம்போய்
நொடிக்குள்ளே வாரிதியும் மிகவும்பொங்கி நோக்கமுடன் ராவணனார் தம்பியானோர்
படிகடந்து சமாதிக்குப் போகநன்று பட்சமுடன் பாரினிலே இருக்கலாகா 
குடிகொண்ட மயிலிராவணனாரொக்க கூட்டமுடன் சமாதிக்கு ஏகினாரே

விளக்கவுரை :


2415. ஏகவே ராமர்வெகு கோபத்தாலும் எழிலான சிதையின் சாபத்தாலும்
போகவே கோட்டைமுதல் யாவுங்கெட்டு பொன்னிலகுபதி தனக்கு போகமென்று
சாகமுடன் சமாதிக்கு இடமுந்தேடி சட்டமுடன் இலங்கைபதி கடலோரத்தில்
பாகமுடன் கோட்டையது நடுமையத்தில் சர்வரும் சமாதியது நின்றிட்டாரே  

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar