1266. பார்க்கவே வெகுகோடி
சித்தர்தாமும் பதிவாகக் காணவென்று வருவார்போவார்
ஆர்க்கமுடியாது
தனத்தின்சேர்வை ஆஇறிவாரிவ் வுலகில் தீதமெத்த
தீர்க்கவே குளிகைகொண்டு
யானுஞ்சென்று திரளான கோட்டைவழி தான்கடந்து
ஏற்கவே சுரங்கத்தின்
வழியுங்கண்டேன் யெழிலான ராவணனார் நிதிகண்டேன்
விளக்கவுரை :
1267. நிதியான
தளவாசலனைத்தும்கண்டேன் நெடிதான பாஞசாலன் கிடாரவைப்பு
பதியான கடலோரம்
விருட்சமுண்டு பாங்கான கோட்டைக்கு யிடபாகத்தில்
வதிமணலென்ற வாறுமுண்டு
மகத்தான வாற்றருகே சுணையுமுண்டு
துதியான கிங்கிலியர்
காவலுண்டு துறைமுகத்தில் கறுப்பண்ணன் நிற்பான்பாரே
விளக்கவுரை :
[ads-post]
1268. நிற்பானே பாஞ்சாலன்
எக்கியசாலை நெடிதான பொன்விலையுந் தலமொன்றுண்டு
கற்பானகன்னிகை
களங்கிருப்பார் கண்டாலே சாபத்தால் சமைப்பார் கண்டீர்
பொற்பான குடமெடுத்துச்
சலமேதூக்கி போற்றியே யெக்கியத்திற் கக்ச்சனையே செய்வார்
துற்பான
யாகசாலயத்தைக்கண்டேன் துடியான குளிகையிட்டு நடந்தேன்பாரே
விளக்கவுரை :
1269. நடந்தேனே சீனபதி நாடிவந்தேன்
நானங்கே சிகாலமிருந்துபார்த்தேன்
தொடர்ந்தேனே
தட்சினமாம்பதிக்கு வந்தேன் தொடரான வஞ்சனமாங் கிரியில்வாழும்
அடர்ந்தேனே யவரிடமாங்
குகையிற்சென்று அடங்காத சாத்திரத்தி னளவுபார்த்துக்
கடந்தேனே சிகரமலை
மேலைசென்றேன் கடாட்சிக்க ரிஷபத்தை துறைபார்த்தேனே
விளக்கவுரை :
1270. துரைகண்டேன் காலாங்கி
பாதங்கண்டேன் துய்யமலர்தானெடுத்து சரணஞ்செய்தேன்
கரைகடந்தேன்
கடந்தமுனிரிஷிகள்தம்மை கார்க்கவென்று வவர்களிட பாதஞ்சென்றேன்
முறைகொண்டேன் சித்தர்களை
யான்வணங்கி மொழிந்திட்டேன் லோகத்தின்மகிமை தன்னை
தரைகண்டே
னடிமுடியனைத்துங்கண்டேன் சதாநிஷ்டையத்தனையும் வெளியிட்டேனே
விளக்கவுரை :