1271. வெளியிட்ட யெந்தன்மேல்
சந்தோஷித்து வெளியாக சாத்திரத்தின் மறைப்புதன்னை
பலியிட்ட சாபத்தை
நிவர்த்திசெய்து பாருலகி லெள்ளோரும் பிழைக்கவென்று
குளியிட்ட கவனமுதல்
கெவுனசித்தி குறிப்பான வடையாள மனைத்துங்காட்டி
வளியிட்டா ரெந்தனுக்கு
வாக்குசொல்லி வரங்கொடுத்தா ரிஷிமுனிவர் சித்தர்தாமே
விளக்கவுரை :
1272. சித்தருடவரம்பெற்று
திரும்பியானும் சென்றேனே சீனபதிதேசந்தன்னில்
நித்தமுடன் முனிரிஷிகள்
சித்தர்தாமும் நேர்துரைத்தமுறைப்படியே யானுங்கொண்டு
சத்தமுடன் செத்ததொரு
மனிதர்தம்மை தாரணியில் காணுதற்கு ஜாலஞ்சொல்வேன்
பத்தியடன் மாளிகையா
மச்சிவீடு பாங்காகத் தான்சமைப்பீர் மைந்தாகேளே
விளக்கவுரை :
[ads-post]
1273. கேளவே பத்தடியாய் நாலுபக்கம் கெடியான சந்தில்லா மச்சிவீடு
நீளவே யொருபக்கம் சந்தமைத்து
நிலையான வாள்போக யிடமுண்டாக்கி
தாளவே கண்ணாடி கீழ்புதைத்து
தாக்காகச் சுற்றிலும் படமடைத்து
ஆளவே ஒவ்வொரு படத்தில்தானும்
அய்யனே அண்பெண்ணா ரூபஞ்செய்யே
விளக்கவுரை :
1274. செய்யவே கண்ணாடி
யறுபத்துநான்கு திறமுடனே வைங்கோல மையினாலே
பையவே வெவ்வேறு
சட்டந்தன்னில் பாங்காகப் பலவிதரூபமாக
தொய்யவே சகலவிதவர்ணத்தாலே
தோற்றவே நேத்திரத்திற் கழகாக
மய்யவே மறைப்பினுட கருவினாலே
மாட்டடா நெற்றுதனில் பொட்டுவையே
விளக்கவுரை :
1275. வைக்கவே மாளிகையில்
மேற்புரத்தில் வகையுடனே வாகாஷங்காண்பதற்கு
கைக்கனத்தக் குழாவொன்று
துத்தநாகம் கடுந்தூரம் பார்வையது தெரியவேதான்
மெய்க்கவே குழாவினுட
சந்தினாலே மேல்நோக்கி வாகாஷந்தன்னைப்பாரு
பொய்க்கவே கண்ணிமைகள்
சிமிட்டாமற்றான் பொங்கமுடன் தானின்று சிரசைப்பாரே
விளக்கவுரை :