1276. பார்க்கையிலே ரூபமது
யெதிரேநிற்கும் பாங்குடனே மறுபடியு மாயாரூபம்
பார்க்கையிலே மறுபடியுங்
கண்ணாடிபாரு படிகமென்ற கண்ணாடி ரூபங்காட்டும்
பார்க்கையிலே யாரைநீ நினைத்திட்டாலும்
பட்சமுட னெதிர்நின்று தோற்றங்காணும்
பார்க்கையிலே நிஜரூப
மிறந்தோர் காண்பீர்பாரினிலே ஜாலவித்தை பகரலாமே
விளக்கவுரை :
1277. பகரலாம் தோற்றமதை காணும்போது
பகற்கால மேகமதுயிருக்கப்போகா
நகரெலாஞ் சூரியனி
னொளியேவேண்டும் நாட்டமுடன் திரைக்குள்ளே நிற்கும்போது
சகரெலாமஃ காண்பதற்கு யிடமும்
வேண்டு சட்டமுடன் கடிகைதனில் பத்துக்குள்ளே
பகரலாம் மாளிகையில்
ஜாலவித்தை புகழ்ச்சியுட னெப்போதுங் காட்டுவீரே
விளக்கவுரை :
[ads-post]
1278. காட்டவே
மாளிகையினுட்புகுந்து கனமான ரூபத்தைக் காணும்போது
நாட்டமுடன் மனோலயமு
மாறியேதான் நடுக்கமுட நேத்திரத்தில் ரூபங்காட்டும்
வாட்டமுடன் ஜெகஜால
வித்தைதன்னை வாகுடனே மானிடர்களறியவென்று
தேட்டமுடன்
போகரிஷியானுங்கண்டு தெளிவாகப் பாடிவைத்தேன் திறமிதாமே
விளக்கவுரை :
1279. திறமான வித்தைதனை
சீனந்தன்னில் தெளிவாகச் செய்துமல்லோ கீர்த்திபெற்றேன்
திறமான போகரிஷியென்றுசொல்லி
திக்கிலுள்ள ஜெனமெல்லாம் கண்டுவந்து
திறமான வித்தையிது
வதீதவித்தை தேசத்தில்கிட்டாது சித்தாக்கில்லை
திறமானலோகமதை மயக்கும்வித்தை
தெரிவித்தார் போகரிஷியென்றிட்டாரே
1280. என்றிட்ட சித்தரெல்லா
மொன்றாய்க்கூடி ஏகாந்தம்பேசியல்லோ எனைக்கோபித்தார்
கன்றிட்ட பாலதுபோல்
யானும்பொங்கி கடிந்துரைத்த மொழிதனையே கருத்திலுன்னி
வென்றிட்ட ரிஷிமுனிவர்
ஜாலம்சொன்னார் வேதாந்த தாயெனக்குச் சாபந்தீர்த்தாள்
அன்றிட்ட சாபத்தைக்
கடந்துயானும் அப்பனேயநேகவித்தை செய்தேன்பாரே
விளக்கவுரை :