1281. பார்க்கவே வாகாஷம்பாவந்தன்னில் பரிவுடனே குதிப்பதற்கு கூண்டுசொல்வேன்
கார்க்கவே
வட்டமாங்குடைதானொன்று பாங்கான குடைநிகள மகலங்கேளிர்
ஏர்க்கவே ஆறடியாவட்டவீடு
யெழிலான பட்டுவடந் தன்னாற்செய்து
தீர்க்கவே பிரம்பதுவும்
முப்பத்திரண்டு திறமான சக்கரமுமொன்றேமாட்டே
விளக்கவுரை :
1282. மாட்டவே
சக்கரத்திலிரும்புக்கம்பி மார்க்கமாய்த் தான்முடுக்கி வாணிமாட்டி
நீட்டமுடன் கம்பிக்குத்
துணிதான்போர்த்து நெடிதான சூத்திரமாங் கயற்தான்கோர்த்து
வாட்டமுடன் தான்விரித்து
குடையையேந்தி வாகாகத் தான்குதிக்கில் வாயுபூந்து
தேட்டமுடன் காற்றதுவுங்
கூண்டேதூக்கும் தீவிரமாய் மனிதனுந்தான் கீழ்நோக்கலாமே
விளக்கவுரை :
[ads-post]
1283. நோக்கலாம் குடைதனையே
கையிலேந்தி நொடிக்குள்ளே மலையைவிட்டு குதிக்கும்போது
தூக்குமே
குடைதானுமனிதனைத்தான் துப்புரவாய் மனிதனங்கே துணிவுகொண்டு
தேக்குடனே பூமிதனிலிறங்கும்போது
தேசமெல்லாங் கண்ணுக்கு ளணுவுபோலும்
நோக்குடனே தெரியுமென்று
போகர்தானும் நேராகப் பாடிவைத்தேன் நேர்மைபாரே
விளக்கவுரை :
1284. பாரேதானின்னமொரு
சூட்சஞ்சொல்வேன் பாருலகி லிந்தவித்தைபழக்கஞ்செய்ய
சீரேதானாற்றருகே
தன்னிற்சென்று சிறப்பான ஜலமதுவும் நிற்கும்போது
நீரேதான் பாளமதில்
நின்றுகொண்டு நேர்த்தியாய் குடைதனையே கையிலேந்தி
தீரேதான் ஜலமதினில்
குதித்தாயானால் திறமான தேகமது பழுதுறாதே
விளக்கவுரை :
1285. பழுதுமே வாராது தேகந்தானும்
பலகாலுமிப்படியே பழக்கஞ்செய்தால்
கழுதுவள தானிருக்கும்
பனையின்மேலே கருவாகத்தானேறி குடையையேந்தி
தொழுமே பராபரியை மனதிலெண்ணி
தொய்யாமலே பூமியிலே குதிப்பீரானால்
முழுதுமே லாசுடனே
பழக்கந்தன்னால் முனையான கோபுரத்திலேறலாமே
விளக்கவுரை :

