பத்திரகிரியார் பாடல்கள் 211 - 215 of 231
பாடல்கள்
211. என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து
இருப்பது எக்காலம்?
விளக்கவுரை :
212. தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்?
விளக்கவுரை :
213. என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து
இருப்பது எக்காலம்?
விளக்கவுரை :
214. தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
215. இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள்
தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்?
விளக்கவுரை :