இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 116 - 120 of 130 பாடல்கள்



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 116 - 120 of 130 பாடல்கள்

116. ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே.     

விளக்கவுரை :

117. மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே.       

விளக்கவுரை :

118. இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே.     

விளக்கவுரை :

119. உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே.    

விளக்கவுரை :

120. முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே.  

விளக்கவுரை :

இடைக்காட்டுச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள், idaikattu siththar, idaikattu siththar paadalkal, siththarkal