சட்டை முனி சித்தர் பாடல்கள் 16 - 20 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  16 - 20 of 200 பாடல்கள்

16. கூடுவதம் பரமோகே சரமோ வென்னில்
          கூர்மையுள்ள வானோவ தீதமோ வென்னில்
ஆடுவதாச் சரியநின் மலமோ வென்னில்
          அருமையுள்ள நிர்க்குணமோ நிரஞ்சனமோ என்னில்
பாடுவது பதங்கடந்த பூரணமோ வென்னில்
          பகலிரவு மற்றிடமோ பராபரமோ வென்னில்
ஊடுவதெங் கேபின்னை யெங்கு மில்லை
          உம்மென்றா லூமவெள்ள மோகங் காணே.

விளக்கவுரை :

17. மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி
          முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான்
பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று
          பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந்
தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்?
          சண்டாள இந்திரியச் சார்பி னாலே
வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு
          விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே.

விளக்கவுரை :

18. வெளியேது வெளிக்குள்ளே வெளியங் கேது?
          வேதாந்த வெளிகடந்த வொளியங் கேது?
அளியேதவ் வளிகடந்த அண்ட மேது?
          அப்புறத்தே தோற்றுகின்ற சோதி யேது?
நெளியேது நினைவேதுநிர்க் குணந்தா னேது?
          நேரான பூரணத்தின் நாத மேது?   
சுழியேது? சுழியடக்குஞ் சூட்ச மேது?
          தோற்றுமப்பா வானத்தை யொத்துப் பாரே.

விளக்கவுரை :

19. ஒத்துநின்ற சரியையொடு கிரியை ரண்டும்
          உறவாதி செய்தவப்பா நன்றாய்க் கேளு;
பத்திநின்ற யோகமுதல் ஞானம் ரண்டும்
          பாங்காகச் சித்தருக்கே அடுத்தவாறே
அந்திநின்ற ஆகாம்யசஞ் சிதபிரா ரத்வம்
          ஆருக்கு மடுக்குமென்றால் யோக மெய்தி
முத்திநின்ற ஞானத்திற் புகுந்தோர்க் கையா
          மூன்றுமிலை பிரபஞ்ச முழுதும் போச்சே.

விளக்கவுரை :

20. போச்சென்பர் முக்காலம் பிறகே நின்று
          புரிமுருக்குப் போலேறிப் புணர்ந்து கொல்லும்
ஆச்சப்பா காலமென்ன வென்று சொல்லி
          அவரவர்கள் சபஞ்செய்வா ரறிந்த மட்டும்;
நீச்சப்பா அகாலவெள்ளம் கடப்பா ரென்றால்
          நேரான ஞானியல்லோ கடந்து நின்றார்
மூச்சப்பா அற்றிடத்தைப் பாரு பாரு
          மூட்டுவிக்கு முகிடந்தான் ஞானத் தீயே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal