சட்டை முனி சித்தர் பாடல்கள் 46 - 50 of 200 பாடல்கள்



சட்டை முனி சித்தர் பாடல்கள்  46 - 50 of 200 பாடல்கள்

46. ஆமப்பா விந்துரவி மதியோர் கூடி
          ஆச்சரியங் கண்கூசி மயக்க மாகி 
ஓமப்பா நாதத்திற் செவிடு பட்டே
          ஊமையென்ற வெழுத்துடைய வுருவங் காணும்
தாமப்பா சத்தியிலே வன்னி யோடு
          சதகோடி ரவிமதியு மொவ்வா வொவ்வா
வாமப்பா லுண்டவர்க்கித் தனையுங் காணும்
          வாய்பேசா ஞானிக்கு மாயந் தானே.

விளக்கவுரை :

47. தானென்ற சிவத்துக்குள் மௌனஞ் சென்றால்
          சதகோடி நவகோடி வன்னிரவி சோமன்
பானென்ற பரத்தின்கீழ் முப்பா ழுண்டு
          பார்மகனே அகாரமொன் றுகார மொன்று
வானென்ற மகாரமொன்று முப்பா ழாக
          வழங்கிற்றே அதனொளியைச் சொல்லப் போகா
தேனென்ற மொழியுடைய னமனாந் தத்தைத்
          தேவிபத மென்றகே சரிதான் காணே.

விளக்கவுரை :

48. காணிந்தக் கேசரத்தின் தாயின் காந்தி
          கண்கொள்ளா விண்கொள்ளா கரையுங் கொள்ளா
ஆணிந்தப் பரையென்பார் அம்பரந்தா னென்பார்
          அவளுக்குள் மவுனமுண் டறிவாய் பாராய்
ஊணிந்த மௌனத்தை நிட்களமாய்ப் போவாய்
          ஓகோகோ அம்பரத்தி லேதோ வேதோ
தோணிந்தப் படியிருந்தால் லயத்தின் நேர்மை
          சொல்லரிதாம் அப்புறத்தே சோதி தானே.

விளக்கவுரை :

49. சோதியென்று பராபத்தி லறுவரை யுண்டு
          சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லிக் காணோம்
ஆதியென்ற மூலகுரு பேரால் மைந்தா
          ஆண் பிள்ளைச் சிங்கமென்ற கொங்க ணர்கேள்
வாதியென்றா லவர்வாதி ஞான வாதி
          மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி
பேதியென்றால் மேருப்போ லேயும் பண்ணும்
          பெருவாதி ரசவாதி பேருள் ளோனே.

விளக்கவுரை :

50. பேருள்ள கொங்கணர்தாம் குளிகை யிட்டுப்
          பேரான பூரணத்தி லறுவரை கண்டார்     
ஆருள்ளா ருலகத்தில் வரைகுரு சொல்ல
          ஆச்சரியஞ் சித்தருக்குக் கீர்த்தி வைத்தார்
நேருள்ள ரிடிகளொடு முனிவ ரையா
          நேராகச் சமாதியிலே கண்டோ ருண்டு
தாருள்ள சலத்தோடுஞ் சென்றா ரில்லை
          சமர்த்தான மனத்தினிடச் சத்தி தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர், சட்டை முனி சித்தர் பாடல்கள், sattai muni siththar, sattai muni siththar gnanam, siththarkal