வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 1 - 5 of 16 பாடல்கள்



வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம் 1 - 5 of 16 பாடல்கள்

1. இருள் வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி
          எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்;
அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்
          ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்;
திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்
          சிவசத்தி திருமாலின் ரூப மாகும்;
வருமுருவே சிவசத்தி வடிவ மாகும்;
          வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.

விளக்கவுரை :

2. வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்;
          வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்;
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்;
          செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூல தேகம்;
          நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்;
தந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்;
          தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே.

விளக்கவுரை :

3. அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
          அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்;
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;
          பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்;
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
          மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு;
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
          சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே.

விளக்கவுரை :

4. ஆமப்பா வுலகத்தில் பெருநூல் பார்த்தோர்
          அவரவர்கண் டதையெல்லாம் சரிதை யென்பார்;
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
          உருகுவார் பூசிப்பார் கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
          வாய்பேசா வூமையைப்போல் திரிகு வார்கள்;
காமப்பா ஞானமென விண்டு மேலும்
          காக்கைபித்தன் மிருகம்போல் சுற்றுவாரே.

விளக்கவுரை :

5. சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்
          தூடிப்பா ருலகத்தல் சிற்சில் லோர்கள்!
தெற்றுவா ரவர்பிழைக்க அனேக வேடம்
          தேகத்தி லணிந்துகொண்டு திரிகு வார்கள்;
பற்றுவார் குருக்களென்பார் சீட ரென்பார்
          பையவே தீட்சைவைப்பார் தீமை யென்பார்.
கத்துவார் திருமூர்த்தி தாமே யென்று
          காரணத்தை யறியாத கசடர் தானே;

விளக்கவுரை :

வால்மீகர் சித்தர், வால்மீகர் சித்தர் சூத்திர ஞானம், vaalmeegar siththar, vaalmeegar siththar soothira gnanam, siththarkal